ஶ்லோக் - 1
ஸ்ரீமந் நாராயணா வன்னொ
வந்தி3ன் லிக்குஸு தீ3 ஸிரின் ꣎
ஜுட3த்திஸொ இக3த்தெங்கொ,
ஸௌராஷ்ட்ர நீதி ஶம்பு3 நுன் ꣎꣎
த3யா ஸுந்து3ர் நாராயணுக் பாய்ஞ்பொட்லி, எல்லெ சொவ்து3னாருக் பு4லோக், உஞ்சா லோக் மெனி தீ3வித4 லோகும் ஸகல ஸம்பத்துன் நிஶ்சயம்கன் அப்3ப3த்திஸொ எல்லெ ஸௌராஷ்ட்ர நீதி ஶம்பு3 லிக்குஸு.
கருணைக்கடல் நாராயணனை வணங்கி, இதை படிப்பவர்களுக்கு இந்த உலகிலும், மேலுலகிலும் அனைத்து செல்வமும்
நிச்சயமாக கிடைக்கும்படியாக இந்த சௌராஷ்டிர நீதி சம்புவை இயற்றுகிறேன்.
With My prayers to Sreeman Narayana, I compose this Sourashtra Neethi Sambu, which will surely bring prosperity to the readers in
this world and beyond
ஶ்லோக் - 2
லோகும் கொ3வ்ளொ ஸொகன் தே3வு,
லைடொ3 க2ள்ல்யௌன ரக்ஷ்வெனு ꣎
ப4க்துனுக் மதி மெக்3 தே3ஸு
ரக்ஷுல்னொ தெகொ ஹால் தெனு ꣎꣎
லோகும் தே3வு கொ3ல்லர் ஸொகன் ஹாதும் லைடொ3 க2ள்ளி அவி கப3ட்3னா. ஹொயெதி, ப4க்துனுக் பு3த்3தி4 தே3ய். தெல்லெ பு3த்3தி4 ஹால் ப4க்துனுன் தெங்கொ3 கப3ள்ளுனொ.
உலகில் கடவுள் இடையரைப் போன்று கையில் கழி (கம்பு) எடுத்துக்கொண்டு வந்து காப்பாற்ற மாட்டார். எனினும் ப4க்தர்களுக்கு
மெய்யறிவை கொடுப்பார். அந்த அறிவால் பக்தர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
God will not come and protect with a staff (stick) like a Cowherd, in this world. But, he will give wisdom to his devotees.
Devotees should protect themselves with the wisdom.
ஶ்லோக் - 3
தை3வத்தன் ஒண்டயோஸ் பு2ர்ன,
மெனிக் யத்தன் மிளின் ஹொனொ ꣎
தி3ய்யொ மிள்நாத்தொ காம் அஸ்கொ
ஹோன கை பூர்திஸ் உத்தம ꣎꣎
ஹே ꣎ ஸ்ரேஷ்டு ꣎꣎ அதுர்ஷ்டு ஒண்டேஸ் பு2ர்னா. மெனிகு யத்தன் மெல்லொ செர்னொ. எல்லெ தி3ய்யொ (அதுர்ஷ்டு, மெனிக்யத்தன்) ஒண்டேஸ் ஹோனாத்தக் கிஸான் காம் ஹொயெத்மெல்லொ பூர்தி ஹோனா.
ஹே ꣎ சிறந்தவனே ꣎꣎ அதிர்ஷ்டம் மட்டுமே போறாது. மனிதனின் முயற்சியும் சேரவேண்டும். இவை இரண்டும் (அதிர்ஷ்டம், மனித முயற்சி)
ஒன்று சேராமல் எந்த வேலையாக இருந்தாலும் நிறைவடையாது.
Oh, the best ꣎꣎ Luck alone is not enough. Human effort should also be added. Without these two (Luck and Human effort) put together,
no work will get completed.
ஶ்லோக் - 4
தை3வத்தன் அவி அப்லானும்,
மிளைமெனி ஸுதி3ன் ஸதா3
ஹட்விலின் கோ3 மெனிக்யத்தன்
கெர்லஸுன் கரெ ஹோஸ்திஸொ ꣎꣎
அதுர்ஷ்டு திகுச்சர் அவி செரய் மெனி பு3த்3தி4ஶாலின் கொ2ப்3பி3மு ஹவ்ட3ன் தொ2வ்லி, ஸொண்ணாத்தக், ப2லன் தே3த்திஸா மெனிக்யத்தன் கெரஸுன்
அதிர்ஷ்டம் தன்னால் வந்து சேரும் என்று புத்திசாலிகள் எப்பொழுதும் நினைவில் வைத்திருந்து, விடாமல் பலன் தரும் முயற்சி செய்வார்கள்
The wise will always remember that luck will come by itself, and will continuously put useful human effort.
ஶ்லோக் - 5
தை3வத்தன் பீ3 ஸொகன்,
மெனிக் யத்தன் பூ4ஞீ ஸொகன் ꣎
பூ4ஞ்பீ3ன் மிளேத்ன ஹோஸ் ஸஸ்யொ
தி3ய்யொ மிள்னாத்தொ ஹோன கை ꣎꣎
அதுர்ஷ்டு மெனரியொ வித்து ஸொகன். மெனிக்யத்தன் பூ4ய்ஞ் ஸொகன். பூ4ய்ஞ்கின் வித்து செரதீ3ஸ் போ2ள் (ப2லன்) அப்3ப3ய். தி3ய்யொ செர்னாத்தக் கொன்னி ஹோனா.
அதிர்ஷ்டம் என்பது விதை போல. மனித முயற்சி என்பது பூமி போல. பூமியும் விதையும் சேர்ந்தால் தான் பலன் கிடைக்கும்.
இரண்டும் சேராமல் எதுவும் ஆகாது
Luck is like a seed. Human effort is like the earth. Only when the earth and the seed come together will there be fruit.
Nothing happens without these two coming together
ஶ்லோக் - 6
தை3வத்தன் தே3ன போ2ள் அஸ்கொ,
மெனிக்யத்தன் ஸொடே3த் ஸதா3 ꣎
பீ3 ந்ஹீத்தொ பு4ஞி கோ3 ர்ஹாஸு
பீ3 க4ல்நாத்தொ ஹொடை3 கிஸொ ꣎꣎
மெனிக்யத்தன் ஸொட்3டி3யெத் அதுர்ஷ்டு கொ2ப்3பி3ம் அஸ்கி போ2ளுன் (ப2லன்) தே3னா. வித்து ந்ஹீத்தொ பூ4ய்ஞ் கோ3ஸுஸ் ர்ஹாஸு. வித்து க4ல்நாத்தக் கோனக் ஹொடி3 அவய்?.
மனித முயற்சியை விட்டுவிட்டால் அதிர்ஷ்டம் எப்போதும் ஒரு பலனையும் தராது. விதை இல்லாமல் பூமி வெறுமனே இருக்கும்.
விதை விதைக்காமல் எப்படி வளர்ந்து வரும்?
Luck does not always pay off if human effort is abandoned. The earth would simply be without seed. How can a seed grow without being sown?
ஶ்லோக் - 7
பீ4கு3 மைநாத்தக் ஹோ இந்த்3ரு,
அபுல் ஸில்மொ தொகன் மிளே
ப4ஜ்ஜி தீ கை2 ஜிவேத் நிம்மள்
க3ரன் ஶே தெங்கொ கொ2ப்3பி3கு ꣎꣎
ஹே | இந்த்3ரு || பீ4ம் மைனாத்தக் அபுல் ஸில்மோம் ர்ஹீ (ஶ்ரமொ ஹால்) அப்3பெ3 ப4ஜ்ஜி ஸொகன் உன்னொ ஆஹார் கை2தி ஜிவெதி ஜித்ரவும் நிம்மள் ர்ஹாயி. திஸனி ஜிவரியொ தெங்கொ கொ2ப்3பி3ம் ம்ஹொட்டப்பன் அப்3ப3யி.
ஹே | இந்திரனே || பிச்சை எடுக்காமல், தன்னுடைய உழைப்பில் கிடைத்த கீரை போன்ற குறைந்த உணவை சாப்பிட்டு வாழ்ந்தால்,
வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும். அப்படி வாழ்பவர்களுக்கு எப்போதும் மரியாதை கிடைக்கும்.
Hey Indira | If he eats scanty food like spinach which he got in his labor without begging, he will get peace in life.
Those who live like that will always get respect.
ஶ்லோக் - 8
பீ4கு3 மைநாத் அபுல் கொ4ம்மொ
ப4ஜ்ஜி தீ கை2 ஜிவேத் ப3ர ꣎
ஸெஜ்ஜ கே4ர் உஜ்ஜெமன் மெந்தின்
ஜெமேத் ஔமான் உஜை தெகொ ꣎꣎
பீ4ம் மைனாத்தக் அபுல் கொ4ம்மொ ப4ஜ்ஜி ஹொயெத்மெள்ளி கை2தி ஜிவத்தெ சொக்கடு3. செடா3வ் ஜெமன் மெனெத்தெஹால் லொகு3த்தா கொ4ம்மொ ஜீ க2யெதி தெகொ அவ்மான் அவய்.
பிச்சையெடுக்காமல் தன் வீட்டில் கீரையைக்கூட உண்டு வாழ்வது நல்லது. சிறந்த விருந்து என்பதற்காக பக்கத்து வீட்டில் சென்று சாப்பிட்டால்
அவமானமே ஏற்படும்.
It is better to eat and live with even greens in his house without begging. Eating at the house next door, just because it is a great feast,
will bring disgrace.
ஶ்லோக் - 9
வேது3ன் படி2னி ஶாஸ்த்ராதி3ன்
தீர்துனும் பு3ண்ணி கோ3ளுனும் ꣎
ஹோ ரஜா ஸெத்து வத்தாகு
ஸமான்கீ ந்ஹாநகீ கிஸொ ꣎꣎
ஹோ ரஜா ꣎ சார் வேது3னுன் சொவ்த3த்தெ, ஶாஸ்த்ரான் அஸ்கி அப்4யாஸ் கெரத்தெ, பு4லோகு புண்ய க்ஷேத்ருனும் பு3ட3த்தெ எல்லெ அஸ்கி ர்ஹத்த வத்தாக் ஸமான் ஹோய்யா? கோன் தா4னுக்மெள்ளி ஸமான் ஹோனா.
ஹோ ராஜா ꣎ நான்கு வேதங்களை படித்தல், சாஸ்திரங்களை பயிலுதல், உலகின் புனித ஸ்தலங்களில் நீராடுதல், இவை எல்லாம் உண்மையான
வார்த்தைக்கு ஈடாகுமா? எந்தவிதத்திலும் ஈடாகக்கூடியது அல்ல.
Oh King ꣎ Reading the four Vedas, practicing the Shastras, bathing in the holy places of the world, will all these equal to the truthful word?
Not compensable in any way.
ஶ்லோக் - 10
ஶம் ஹீர்னுகு ஹிரோஸ் லானி
ஶம் ஹிரானுக் க்ரதூஸ் ப3ர ꣎
ஶம் யாகு3னுக் பெ3டோஸ் லானி
ஶம் பெ3டானுக் நிபூ3ஸ் ப3ர ꣎꣎
ஸோவு (100) ஹீர்னுன் க2னத்தெ ஸொம்மர் ஒண்டெ தடொ கொவ்ரத்தெ ப3ரொ. ஸோவு தடானுன் கொவ்ரத்தெ ஸொம்மர் ஒண்டே யாகு3 கெரத்தெ ப3ரொ. ஸோவு யாகு3னுன் கெரத்தெ ஸொம்மர் ஒண்டே சொக்கட்3 பெ3டொ ப3ரொ. ஸோவு பெ3டானுன் ஸொம்மர், ஸெத்து ஸெரொ ர்ஹாத்தேஸ் ப3ரொ.
நூறு கிணறுகளை தோண்டுவதை விட ஒரு குளம் வெட்டுவது நல்லது. நூறு குளங்கள் வெட்டுவதை விட ஒரு யாகம் செய்வது நல்லது.
நூறு யாகங்கள் செய்வதை விட ஒரு நல்ல மகன் இருப்பது நல்லது. நூறு மகன்களை விட, வாய்மையுடன் இருப்பதே நல்லது.
It is better to build a pond than digging hundred wells. It is better to perform a sacrifice than to building hundred ponds.
It is better to have one Son than performing hundred sactifices. It is better to be truthful than hundred sons.
ஶ்லோக் - 11
ஸஸர் அஶ்வக்ரதுன் ஜோகு3ம்
ஸெத்து து3ஸ்ரொ தெ4டா3ம் தொ2வி
ஜொகே3த் ஸஸர் கொ4டா3 யாகு3ன்
ஹள்வ ஹோஸ் ஸெத்து ஸொம்மரு ꣎꣎
துலாம் (தராஸும்) ஒண்டெ தெட்டாம் ஸஸர் (1000) கொ4டா3யாகு3ன் (அஸ்வமேத3 யாக3ம்) கெரெஹால் அப்3பெ3 போ2ள்கின் (ப2லன்), து3ஸுரெ தெட்டாம் ஸெத்து தொ2விகின் ஜொவெதி, ஸெத்து ஸொம்மர் ஸஸர் கொ4டா3யாகு3ன் போ2ள் ஸேத்தெ தெட்டொ ஹவ்ளொ ர்ஹாஸு.
தராசின் ஒரு தட்டில் ஆயிரம் அஸ்வமேதயாகம் செய்ததால் கிடைத்த பலனையும், இன்னொரு தட்டில் வாய்மையையும் வைத்து எடை
போட்டால், வாய்மையை விட ஆயிரம் அஸ்வமேதயாக பலன் உள்ள தட்டு இலேசாக இருக்கிறது.
In a scale, if one plate containing the results of thousand Aswameda sacrifice weighed with another plate containing the truth, then the plate
with the results of thousand Aswameda Sacrifice is lighter than the truth.
ஶ்லோக் - 12
ஸெத்துக் ஸமான் தெ4ரும் ஜுண்ண
ஸெத்து ஸொம்மரு ஶ்ரேஷ்டு2 ந்ஹீ ꣎
ஸெத்து ந்ஹீனும் பொ4வே பாபுன்
ஸெத்து ஶேத்தெகொ ஶே க3ரன் ꣎꣎
ர்ஹத்த வத்தாக் ஸமான் ஹொயெ தெ4ரும் கொன்னி ந்ஹீ. ர்ஹத்த வத்தொ ஸொம்மரு செடா3வ் ஹொயெயொ கொன்னி ந்ஹீ. ர்ஹத்த வத்தொ ந்ஹீத்தெகொ ஜொவள் ஜு2கு து3ர்கு3ண்ணுன் ர்ஹாயி. ர்ஹத்த வத்தொ ஸேத்தெகொ ஜொவள் கெ4னம் ர்ஹாயி.
வாய்மைக்கு இணையான தர்மம் எதுவுமில்லை. வாய்மையை விட மேலானது எதுவுமில்லை. வாய்மை இல்லாதவரிடம் நிறைய கெட்ட
குணங்கள் இருக்கும். வாய்மையுடன் இருப்பவரிடம் பெருமை இருக்கும்.
There is no virtue equal to truth. There is nothing better than truth. Those who do not have truth, will have a lot of bad qualities.
The one who is truthful will have pride.
ஶ்லோக் - 13
ஸெத்து சொக்கட்3 தெனூஸ் தெ4ர்லன்
ஸெத்து ஶாஸ்வத தா3ன் எமொ
ஸெத்து பெ4ள்ளி நமஸ்காரு
ஸெத்து நீதிகு மார்கு3னு ꣎꣎
ர்ஹத்த வத்தொ சொக்கட்3 தெனுனூஸ் ஹாத் தெ4ர்லன். ர்ஹத்த வத்தொ, ஸதா3 கலம் தா3ன் தே3த்தெ மெனெத்தெ எல்லெ தீ3 தெமாம் ர்ஹத்த வத்தோஸ் ஜு2க்கு மொர்க்3யாத் ஹொயொயொ. ர்ஹத்த வத்தொ அஸ்கி தெ4ருமுக் வாட் தெ3க்கட3ரியொ முது3ல்லா பகு3லு.
நல்லவர்களே வாய்மையை கடைப்பிடிப்பார்கள். வாய்மை, இடையறாத தானம் என்ற இந்த இரண்டில் வாய்மையே மிகவும் மரியாதைக்குரியது.
வாய்மை எல்லாவித தருமத்திற்கும் வழி காட்டும் முதல் படி.
Only the good follow the truth. Of the Truth and the constant donation, the truth is most respectful. The truth is the first step for all kind of
righteousness.
ஶ்லோக் - 14
பை2லாம் தெ4ரும் ம்ஹொஜார் ஆஸ்தி
ஸெத்லொ லோகாஶொ தீ2ன் அமி
ஸதா3 அனுஸரின் ஏ ரீதின்
சல்னொ ஶே விதி4 தா4னுக் ꣎꣎
ஶாஸ்தரும் ஸங்கெ3 நியம் தா4னுகு, அமி முது3ல்லொ தெ4ரும், ம்ஹத்3தி3ம் ஹன்னவ், த4னம் தொ3டு3ஞ்ஜத்தெ, அந்தும் பு4லோகு ஸுக2ம் அனுப4வுஞ்சத்தெ மெனி எல்லெ தீ2னே கொ2ப்3பி3ம் அனுஸரனொ கெர்லி சல்னொ ஶேத்தெ.
சாஸ்திரங்களில் கூறப்பட்ட விதிப்படி, நாம் முதலில் தருமம், நடுவில் பணம் சம்பாதித்தல், கடைசியில் உலக இன்பங்களை அனுவித்தல் என
இந்த மூன்றையும் எப்போதும் பின்பற்றி நடக்க வேண்டும்.
As per the rules stated in the scriptures, we should always follow these three, first of all following the righteousness, making money in the
middle and enjoying worldly pleasures in the end.
ஶ்லோக் - 15
கோன் அப்லான் ஆபதா3ம் மெள்ளி
தெ4ரும் ஸொண்ணாத்தொ ர்ஹாஸுகீ
த4ர்மிஷ்டி2னும் தெனாஸ் ஶ்ரேஷ்டு2
ஜீவுன் புன்னு கு3பை தி3தை3 ꣎꣎
கோன் ஒண்டெனொ அபுல் கெஷ்டமு கலமு மெள்ளொ தெ4ரும் ஸொண்ணாத்தக் சல்லரஸ்கி, தெனோஸிஸ் த4ர்மவானும் செடா3வ் ஹொயெத்தெனொ. தெ4ரும் ஜீவுக் கப3டை3, பி2ரி தே3ய்.
யார் ஒருவர் தனது கஷ்ட காலத்திலும் தர்மத்தை விடாமல் கடைப்பிடிக்கிறாரோ, அவரே தர்மவான்களில் தலை சிறந்தவர்.
தர்மம் உயிரைக் காக்கும், மீண்டும் கொடுக்கும்.
He who does not give up Righteousness even in his hard time, is the best among the Righteous. Righteousness saves life and gives back.
ஶ்லோக் - 16
இஜ்யா அத்4யயனொ தா3ன் அங்கு3ன்
தொபஸ் ஸெத்து தி4டௌ ஸவன்
நிராஶொ மெனின் ஆட் ரீதின்
தெ4ருமுன் ஜன்லி சல்லஸுன் ꣎꣎
யாகு3ன் கெரத்தெ, வேது3ன் சொவ்த3த்தெ, தா3ன் தே3த்தெ அங்கு3ன் தபஸ் கெரத்தெ, ர்ஹத்த வத்தொ கெரத்தெ, தெ4ய்ர்யம்கன் ர்ஹாத்தெ, மாப் கெரெத்தெ, ஆஸ்தொ ந்ஹாத்தக் ர்ஹாத்தெ மெனி ஆட் வித4 தெ4ருமுன் களள்ளி சல்லஸுன் ம்ஹொட்டான்.
யாகம் செய்தல், வேதங்களை படித்தல், தானம் கொடுத்தல் மேலும் தவம் செய்தல், உண்மை பேசுதல், தைரியமாக இருத்தல்,
மன்னித்தல், ஆசை இல்லாமல் இருத்தல் என எட்டு வித தர்மங்களை அறிந்து நடப்பார்கள் பெரியோர்கள்.
Wise people practice the eight fold righteousness viz performing sacrifice, reading Vedas, giving alms, doing penance (tapasya),
speaking the truth, being brave, forgiving and being detached.
ஶ்லோக் - 17
தெ4ர்மிஷ்டி2ன் ஸெத்துகின் நைதொ
பெ4ள்ளி ஶ்ரேஷ்ட2 தெ4ரும் மெனன் |
ஒள்ட்யான் எகோ3ஸி கோ3ஸ் ஸங்க3ன்
வேது3ம் ஸங்கெ3 விதி4ன் மெனி ꣎꣎
ர்ஹத்த வத்தொ, ந்யாவ் எல்லெ தி3ய்யோஸ் பெ4ள்ளி செடா3வ் ஹொயெ தெ4ரும் மெனி த4ர்மவானுன் மெனஸுன். எல்லேஸிஸ் வேது3னும் உபதே3ஶ் கெரெ ந்யமுன் மெனி ஞானின் பி2ரி பி2ரி ஸங்க3ஸுன்.
உண்மை, நியாயம் இவை இரண்டு தான் மிகச்சிறந்த தர்மம் என்று தர்மவான்கள் கூறுவார்கள். இந்த இரண்டு தான் வேதத்தில்
உபதேசிக்கப்பட்ட விதிகள் என்று ஞானிகள் அடிக்கடி கூறுவார்கள்.
Righteous say that the best virtue is the truth and the justice. The sages often say that these are the two rules taught in the
scriptures.
ஶ்லோக் - 18
தெ4ரும் ஜனத்தெனாஸ் ப்ராஜ்ஞொ
மூர்கு2 கொ2ப்3பி3கு நாஸ்திகொ |
ஸம்ஸாரு லெந்த தி4ல்ல ஆஶொ
மொன்னும் கோ3 ஹுப்ளொ மொச்சரு ꣎꣎
தெ4ரும் களள்யாத்தெனு ஞானின். களள்னாத்தெனு தே3வ் நொம்க்கெ ந்ஹாத்த நாஸ்திகான். மூர்கு2ன் தெங்கொ3 ஜித்ரவ் பூராக் நஜ்ஜெ ஆஸ்தான் ஸெரொ, கொ2ப்3பி3ம் மொன்னும் பொட்ஜாள் லக3ள்ளி ர்ஹானு.
தர்மத்தை அறிந்தவர்கள் ஞானிகள். அறியாதவர்கள் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்கள். அறிவற்றவர்கள் தங்கள் வாழ்நாள்
முழுவதும் கெட்ட ஆசைகளுடன் எப்பொழுதும் மனதில் வயிற்றெரிச்சலில் இருப்பார்கள்.
Those who know righteousness are sages. The ignorants are atheists who do not believe in God. The ignorants will always have
heartburn with bad desires throughout their lives.
ஶ்லோக் - 19
முஹ்னி மென்தொ தெ4ரும் ஹீனு
ம்ஹொட்டொ மீ மென்னி ஹங்க்ருதி |
ஆலஸ்யொ கோ3 தெ4ரும் ஸுட்னி,
வெகுல் அஜ்ஞானு ஹோஸ் எமொ ꣎꣎
மோஹம் மெனெதி தெ4ரும் ந்ஹாத்தக் ர்ஹாத்தெ. மீஸ் ம்ஹொட்டொ மெனி மெனத்தெ அஹங்காரு. கோ3ஸ் தெ4ரும் ஸொடி3 ஜிர்க்கத்தெ ஆலஸ்யொ. மோஹு, அஹங்கார், ஆலஸ்யொ ஹால் விசார்கின் அக்3ஞான் அவி செரயி.
மோகம் என்பது தர்மம் இல்லாதிருப்பது. நான் தான் பெரியவன் என்பது அகங்காரம். அடிக்கடி தர்மத்தை விட்டு விலகுவது
அலட்சியம். மோகம், அகங்காரம், அலட்சியம் இவைகளால் கவலையும், அறியாமையும் வந்து சேரும்.
Lust is the absence of righteousness. Arrogance is that "I am the greatest". Slipping from righteousness is negligence.
Lust, Arrogance, and Negligence bring anxiety and ignorance.
ஶ்லோக் - 20
தீ2ரப்பன் மென்தொ தெ4ரும் சௌல்னி,
தீ4ரப்பன் மென்தொ சிஜ்ஜிது |
பு3ண்ணி மென்தொ மனோஶுத்3தி4,
தா3ன் மென்தொ ஜீவுனுக் புனி ꣎꣎
தீ2ரப்பன் (ஸ்திரத்வம்) மெனெதி தெ4ரும் ஸொண்ணாத்தக் ர்ஹாத்தெ. தீ4ரப்பன் (தெ4ய்ர்யம்) மெனெதி மொன்னுக் ஜெவுஞ்சத்தெ. பு3டத்தெ மெனெதி நஜ்ஜெ கு3ண்ணுனுக் பு3ட்டி மொன்னு ஶுத்3தி4 கெர்லத்தெ. தா3ன் தே3த்தெ மெனெதி தெகா3ம்தெகொ3 தே3வுக் ஸமர்ப்பணொ கெரத்தெ.
ஸ்திரத்தன்மை என்பது தர்மத்தை விடாமல் இருப்பது. தைரியம் என்பது மனதை வெல்வது. நீராடுதல் என்பது கெட்ட
குணங்களை முழுகி மனதை சுத்தமாக்குவது. தானம் கொடுப்பது என்பது தன்னையே கடவுளுக்கு அர்ப்பணிப்பது.
Stability means not letting go of righteousness. Courage is the conquest of the mind. Bathing is the purification of the mind
from all bad qualities. Donation is dedicating oneself to God.
ஶ்லோக் - 21
ப்ரியவாதீ3ஶி லோக்மித்ரு,
முர்ஸுனாரூஶி கௌ2ணுலொ |
ப2ங்கு3ல்னாரூஶி ஸௌக்2யாவி,
த4ர்மிஷ்டீ2ஶி ஸுதா3க3மி ꣎꣎
அஸ்கி தெங்கொ3 ஸெர ப்ராமகன் வத்தொ கெரத்தெனோஸி பு4லோகு ஸிங்கை3து. அவன் ஜாரியொ முது3ல்லாமுஸ் தீ4ர்க்3க3ம்கன் ஆலோசனொ கெரத்தெனோஸி ஸுக2வாஸி. அஸ்கி தெனு ப3ந்து4ன் மெனி வரி ப2ங்கு3ல்னாரூஸி ஸௌக்2யவான். தெ4ரும் தா4னுக் சல்லுனாரூஸி மோக்ஷம் அப்3பி3 ஜாத்தெனு.
அனைவரிடமும் அன்பாக பேசுபவரே உலக நண்பன். வரப்போவதை முதலிலேயே தீர்க்கமாக ஆலோசிப்பவரே சுகவாசி.
அனைவரும் உறவினர் என்று வாரி கொண்டாடுபவரே சௌக்யமானவர். தர்மவானே மோக்ஷம் கிடைத்து செல்பவர்.
One who speaks kindly to everyone is the friend of all. One with the forethought enjoys life. One who thinks all are relatives
and be friendly with them lives in comfort. Righteous one obtains salvation.
ஶ்லோக் - 22
குள்டாக்3 இஸ்னொ ஹொயேத்மெள்ளி,
கிஸொ ஜா2ட3ஸ்கொ மூள் ஸெர
ஜலைகி திஸொ லூப்3தோ3கு
தெ4ரும்கின் த4ன் நஸை கிஸீ ꣎꣎
விஸ்தெவ் ஹித்3தி3 ஹொயெத்மெள்ளி கோன் தா4னுக் பூரா ஜா2டு3கு மூள் ஸெரொ ஜலைகி, திஸனீஸ் லோபி4 ஜொவள் ஸேத்தெ தெ4ரும்கின் த4னமு (ஹன்னவ்) கோனதி ஒண்டெ வாடும் நஸினம் ஹொயி ஜேடை3யி.
கங்கு (நெருப்பு) மிகச்சிறியதாக இருந்தாலும் எப்படி மொத்த மரத்தையும் வேரோடு எரிக்குமோ, அப்படி கஞ்சனிடம் இருக்கும்
தர்மமும், செல்வமும் (பணம்) ஏதாவது ஒரு வகையில் நாசமாகி போய்விடும்.
Even if the burning coke (ember) is small, it will burn down the whole tree including the root. Likewise the righteousness
and wealth (money) of the miser will be destroyed in some way.
ஶ்லோக் - 23
பாண்ட3வ அஹிம்ஸொ தா3ன் ஶாந்தி,
தொபஸ் ஸெத்து மெனே கரென் ꣎
ஸத்கரென் மென்தொ ஏ தெ4ர்லே,
தெ4ரும் ஸேத்தேட் ஜெயம் மெனன் ꣎꣎
ஹே, பாண்ட3வா | அஹிம்ஸொ, தா3ன், மொன்னு ஶாந்தி, தபஸ், ஸெத்து - எல்லேஸிஸ் சொக்கட்3 கு3ண்ணுன் ஹால் எல்லெகொ3 தெ4ர்லே. கோட் தெ4ரும் ஸேகி தேட் ஜெயம் திகுச்சர் அவி செரயி.
ஹே, பாண்டவா | அஹிம்சை, தானம், மன அமைதி, தபம், வாய்மை - இவை நல்ல குணங்கள் என்பதால் இவைகளை பிடித்துக்கொள்.
எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு வெற்றி தன்னால் வந்து சேரும்.
Hey, Pandava | Non-violence, donation, peace of mind, penance, truth - hold on to these because they are good qualities.
Success will come by itself where there is righteousness.
ஶ்லோக் - 24
கீர்தி ஸொண்ணொகொ பெ4ள் ஶ்ரேஷ்டு2,
கீர்தி ரக்ஷிலெ கொ2ப்3பி3கு ꣎
கீர்தி ந்ஹீத்தெனொ தா3ரித்3ரு,
கீர்தி ஶக்திகு ஹேதுனு ꣎꣎
ஒண்டெகாக் அபுல் நாவ் (கீர்த்தி) வேன் செடா3வு. தெகொ3ஹாலி தெல்லெ கீர்த்திகு கொ2ப்3பி3ம் கப3ள்ளுனொ. கீர்த்தி (நாவ்) ந்ஹீத்தெகொ3 ஜொவள் து3ஸுரெ அஸ்கி ர்ஹியெத்மெள்ளி கொன்னி ந்ஹீத்தெகொ3 ஸமான். கீர்த்தி து3ஸுரெ அஸ்கி ஸம்பத்துக் ஆதா4ர் ஹோஸு.
ஒருவருக்கு தன்னுடைய பெயர் (புகழ்) மிகவும் சிறந்தது. எனவே அந்த புகழை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். புகழ் (பெயர்) இல்லாதவனிடம்
மற்ற எல்லாம் இருந்தாலும் ஒன்றும் இல்லாதவனுக்கு சமம். புகழ் மற்ற அனைத்து சொத்து சுகங்களுக்கு மூலம் ஆகும்.
Name (fame) is the best for a person. So, that reputation must be maintained. The one who has no fame (name) is equal to the one who has
everything but nothing. Fame is the source of all other possessions.
ஶ்லோக் - 25
த3யாளுப்பன் ர்ஹியேத் தெங்கொ
பாபுன் அஸ்கி ஸொடி3ன் த4மை ꣎
ஒகத் லெங்கோ3ஸி கௌந்தேய
து3ஷ்கரென் ஹோன ஸத்கரென் ꣎꣎
ஓ! குந்தி புத்ரா !! கோன் ஒண்டெதெனு த3யாளு கு3ண்ணு ஸெரொ ஸேகி3 தெங்கொ3 ஸொடி3 பாபுன் அஸ்கி த4மி ஜேடை3. ஒகத் ர்ஹாரியொ ஹால் ஒண்டேஸ் நஜ்ஜெ கரென் (காம்) சொக்கட்3 கரென் ஹோனா.
ஓ! குந்தி புத்ரா !! யார் ஒருவர் கருணையுடன் இருக்கிறாரோ அவரை விட்டு அனைத்து பாவங்களும் ஓடிவிடும். விரதம் இருப்பதால் மட்டுமே
கெட்ட செயல் நல்ல செயல் ஆகிவிடாது.
Oh ! Son of Kunthi!! All sins will flee from him who has mercy. Fasting alone does not make a bad deed a good deed.
ஶ்லோக் - 26
கோ3ஸ் கோன் அபுல் ஶிஷ்யாகு
ஶிக்கடே3த் அஸ்கி ஸாத4னொ ꣎
கோ3 பூ4 ஹிரண்ய தா3ன் ஆதி3ன்
தி3யெ போ2ளுன் அவை தெகொ ꣎꣎
கோன் ஒண்டெ தெனொ அபுல் ஶிஷ்யாகு ப்ரதி உபஹார் ஸானாத்தக் மோக்ஷம் பொந்த3த்திஸா அஸ்கி வாடுன் ஸிக்கடி3 தே3ஸ்கி தெகொ3 கா3ய், பூ4ய்ஞ், ஸ்வர்ணு ஆதி3ன் தா3ன் தி3யெ போ2ளுன் அப்3ப3யி.
யார் ஒருவர் தன்னுடைய சீடருக்கு பலன் எதிர்பார்க்காமல் மோக்ஷம் அடைவதற்கான அனத்து வழிகளை கற்றுத் தருகிறாரோ அவருக்கு பசு,
பூமி, தங்கம் ஆகியவற்றை தானம் கொடுத்த பலன் கிடைக்கும்.
One who teaches his disciple all the means of salvation without expecting anything in return will get the merit of donating Cow, Land and Gold.
ஶ்லோக் - 27
தா3க்ஷன் முக்2ய தெ4ரும் மென்னொ
தா3ன் கீர்திக் முக்2ய காரணொ ꣎
ஸெத்து ஸ்வாக் முக்2ய ஸோபானொ
ஶீல் ஸௌக்2யமுக் முக்2ய ஸாத4னொ ꣎꣎
த3யாளு கு3ண்ணு ஸெர ர்ஹாத்தேஸீ ப்ரதா4ன் ஹொயெ தெ4ரும் (கர்த்தவ்யம்) ஹோஸு. தா3ன் தே3த்தேஸீ கீர்த்தி (நாவ்) அப்3ப3த்தக் ப்ரதா4ன் ஹொயெ காரணொ. ர்ஹத்த வத்தோஸீ ஸம்பத்துக் முது3ல்லா பகு3ல் ஹோஸு. சொக்கட்3 சால்சலனூஸீ ஸொந்தோஷுக் ப்ரதா4ன் ஹொயெ வாடு.
கருணையுடன் இருப்பதே முக்கிய தர்மம் (கடமை) ஆகும். தானம் கொடுப்பதே புகழ் கிடைக்க முக்கிய காரணம். வாய்மையே செல்வத்திற்கு
முதல் படி ஆகும். நன்னடத்தையே மகிழ்ச்சிக்கான முக்கிய வழி.
Mercy is the chief righteousness (duty). Donation is the chief reason for fame. Truth is the first step of wealth. Good conduct is the chief
means of happiness.
ஶ்லோக் - 28
கோ3 பூ4 வித்3யா தி2னூ தா3னும்
ஓகோகுன் ந்ஹன்ன ம்ஹொட்டொ ந்ஹா ꣎
எமாக் கோன் தா3ன் தி3யேத் மெள்ளி
பஜே போ2ளுன் மிளை ஸனிம் ꣎꣎
கா3யி, பூ4ய்ஞி, வித்3யொ எல்லெ தி2னூ தா3னும் ஒண்டெகாக் ஒண்டெ ந்ஹன்ன ம்ஹொட்டொ மெனி ந்ஹீ. எல்லெ தீ2ன் தெமாம் கோன் தா3ன் தி3யெத் மெள்ளி ஹோந்தயெ போ2ளுன் அப்3ப3ய் மெனி ஹவ்டி3 கொ2ப்3பி3ம்.
பசு, பூமி, கல்வி இந்த மூன்று தானங்களிலும் ஒன்றுக்கொன்று சிறியது பெரியது என்று இல்லை. இந்த மூன்றில் எந்த தானம் கொடுத்தாலும்
தேவையான பலன் கிடைக்கும் என்று எப்பொழுதும் நினை.
Cow, Land, Education are the three gifts that are neither smaller nor bigger to one another. Always think, donating any of these three will
get the requisite benefit.
ஶ்லோக் - 29
அஸூயொ தி3ஜடை3 பா4க்3கி3
வக்ரொ லௌகாஸு அனை தெகொ ꣎
த4ன் மௌஜட்3 ஜவடை3 மைத்ரி
ஈகு3 உத்கை நீஸ் பராக்த் துருன் ꣎꣎
பொட்ஜாள் ஒண்டெகா3 ஸம்பத்துக் உன்னொ பொட3டை3. பொட்ஜளிக் தி4ல்லொ ஸமாசாருன் அவடை3. காஸ் ஹன்னவு கெ3ருவ் ஸிங்கதி3ப்பன் ஜவடை3. கு3ரு நிந்த3னொ, கொன்னிதெங்கொ3 கேர் கெர்னாத்தெ, அவ்ஸர் பொடி3கின் கரெ ஹோனாத்த காமுன் கெரத்தெ இ(த்)க்கூயொ சொவ்து3க் நஸய்.
பொறாமை ஒருவரின் செல்வத்தை குறைக்கும். பொறாமைக்காரனுக்கு கெட்ட சமாசாரங்கள் வரச்செய்யும். செல்வத்திமிர் நட்பை போகவைக்கும்.
குருவை நிந்தித்தல், யாரையும் மதிக்காதிருத்தல், அவசரப்பட்டு உருப்படி இல்லாத வேலை செய்தல் இவையெல்லாம் படிப்பை அழிக்கும்.
Envy wears out one's wealth. Evil deeds will come to the envious. The arrogance of wealth will make friendships go away. Insulting the Guru,
disrespecting anyone, doing hasty and useless work will ruin the learnings.
ஶ்லோக் - 30
த4ன் அவை ஜாயி கொங்கதீ
சொகட்3 சால் லேத் அனை ஸ்ரி ꣎
தி4ல்லொ சால் அன்ன கை பா4க்3கி3
ஹாலிம் ஸொண்ணோஶி து3ஷ்கரென் ꣎꣎
கொங்கொ3 ஹொயெத்மெள்ளி காஸ் ஹன்னவ் அவய், ஜாய். சொக்கட்3 சால்சலன் ஸம்பத்து க2ள்ளி அவை. நஜ்ஜெ சால்சலன் கொன்னி ஸம்பத்து க2ள்ளி அவ்னா. தெகொ3ஹாலி, நஜ்ஜெ கரென் ஸொட்3டு3ணோஸீ.
யாராக இருந்தாலும் பணம் வரும், போகும். நன்னடத்தை செல்வத்தை கொண்டு வரும். கெட்ட நடத்தை எந்த செல்வத்தையும் கொண்டு வராது.
எனவே, கெட்ட செயலை விடத்தான் வேண்டும்.
Money comes and goes no matter who it is. Good behavior brings wealth. Bad behavior does not bring any wealth. Therefore, must give up bad deed.
ஶ்லோக் - 31
த4னிகோ3 ந்ஹா ஜியேத்மெள்ளி
சொகட்3 சாலும் ர்ஹியேத் த4னி ꣎
ஸத்3வ்ருத்திம் ந்ஹீதெனாஸ் தெ3ள்ட்3ரி
ஹாலிம் ரக்ஷுல்னொ யே யெதின் ꣎꣎
காஸ் ஹன்னவ் ந்ஹீத்தெ து3ர்ப3ள் ஹொயெத்மெள்ளி, சொக்கட்3 சால்சலன் ர்ஹியெத் தெனோஸீ த4னவான். சொக்கட்3 சால்சலன் ந்ஹீத்தெனொ தெ3ள்ட்3ரி. தெகொ3ஹாலி, எல்லெ சொக்கட்3 சால்சலன் யத்னு கெரி கப3ள்ளுனொ.
பணம் இல்லாத ஏழையாக இருந்தாலும் நன்னடத்தை இருந்தால் அவனே பணக்காரன். நன்னடத்தை இல்லாதவன் தரித்திரம் பிடித்தவன்.
எனவே, இந்த நன்னடத்தையை முயற்சி செய்து காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.
He who is poor without money is rich, if he is virtuous. He who does not behave is poor. Therefore, this good behavior should be tried
and guarded.
ஶ்லோக் - 32
லோபி4க் ஸத்3கு3ண்ணு கை ஜுண்ண,
ஆஶ ஹால் பெ4ளி பாப் அவை ꣎
ஸெத்து ஸேத்தேட் தொபஸ் லானி
வித்3யொ ஸேதேடு லானி ரல் ꣎꣎
லோபி4 ஜொவள் கொன்னி சொக்கட்3 கு3ண்ணுன் ர்ஹானா. ஆஸ்தொ ஹால் ஜு2கு பாபுன் அவை. ஸெத்து ஸேத்தேட் தபஸ் ந்ஹீஜியெத்மெள்ளி பர்வ ந்ஹீ. சொவ்து3 ஸேத்தேட் த4னம் ந்ஹீஜியெத்மெள்ளி பர்வ ந்ஹீ.
கருமியிடம் எந்த நல்ல குணங்களும் இருக்காது. ஆசையினால் நிறைய பாவங்கள் வரும். வாய்மை இருக்குமிடத்தில் தவம் இல்லை என்றாலும்
பரவாயில்லை. கல்வி இருக்குமிடத்தில் பணம் இல்லை என்றாலும் பரவாயில்லை.
A miser will have no good qualities. Through desire comes many sins. It is fine, if there is no penance where there is Truth. It is fine,
if there is no wealth where there is Education.
ஶ்லோக் - 33
ஸம்ஸாரு ஜிவ்னி ரை ஜாணொ,
லோகும் யே சார்யொ ந்ஹா தி2ரன் ꣎
தெ4ரும் கின் ஸெத்து ஶே கெ2ப்3பி3ம்,
ஸன்மார்கு3ம் தி3ய்யொ லேத் அனை ꣎꣎
பு4லோகும் குடும்ப3ம், ஜித்ரவ், ஸம்பத்து, யௌனொ எல்லெ சருயோ ஸ்திரம் ஹொயெயொ ந்ஹா. தெ4ரும் கின் ஸெத்து ஒண்டேஸ் லம்பு3ரும் ர்ஹாய். எல்லெ தி3ய்யொ அவுங்கொ3 சொக்கட்3 வாடும் பொ3ல்லி ஜாய்.
உலகில் குடும்பம், வாழ்க்கை, செல்வம், இளமை இந்த நான்கும் நிரந்தரமானது அல்ல. தர்மமும் வாய்மையும் தான் எப்போதும் இருக்கும்.
இவை இரண்டும் நம்மை நல்ல பாதையில் அழைத்துச் செல்லும்.
In this world, Family, Life, Wealth and Youth are not permanent. Righteousness and Truth will be there always. These two will lead us on a
good path.
ஶ்லோக் - 34
த4னி ஸத்குலி வித்3யாவி,
நித்லொ வித்லொ நிராமயொ ꣎
வாக்3மி ஶாஸ்த்ரி மஹாஸூரி,
ஜ்ஞானி ரூபி ஸனாதனொ ꣎꣎
த4னவான், சொக்கட்3 குலமு உஜ்ஜெத்தெனு, சொவ்தெ3த்தெனு, ந்யாவ்கன் சல்லத்தெனு, பு3த்3தி4 ஸங்க3த்தெனு, ஶுத்3த4ம்கன் ஸேத்தெனு, ஸமர்த்துகன் வத்தொ கெரெத்தெனு, ஶாஸ்தர் ஸிக்யாத்தெனு, ம்ஹொடொ3 வித்3வானு, ஞானின், ஸிங்க்3யார் ஸேத்தெனு எல்லெ அஸ்கி ஸேத்தெனு லம்பு3ரும் ஜிவனு.
பணமுள்ளவர், நல்ல குலத்தில் பிறந்தவர், படித்தவர், நியாயவான், புத்திமதி சொல்பவர், களங்கம் இல்லாதவர், பேச்சாற்றல் மிக்கவர்,
சாஸ்திரங்களை கற்றவர், அனைத்து விஷயங்களை அறிந்தவர், ஞானி, அழகானவர் இவை அனத்தும் உடையவர்கள் என்றென்றும் வாழ்வார்கள்.
Those who are wealthy, well born, educated, just, counsel others, untainted, eloquent, well versed in Shastras, highly learned, Sage and
handsome will live forever.
ஶ்லோக் - 35
லாஸு மீகு3 ஸதா3 கே2ளு,
பெனி யே சார்யொ லூப்தொகன் ꣎
லேத் அனை கெ2ப்3பி3 வ்யாகூலுன்,
யே லுனை ரைனு கின் க3ரன் ꣎꣎
ஸ்த்ரீ மோஹம், மிருக3முக் மரத்தெ, ஸதா3 ஸூது3கா2ள், பனி தய்லத்தெ மெனி யே சார்யொ வேன் ஆஸ்தாம் ர்ஹீ அவரியொஹால் கொ2ப்3பி3ம் விசார் க2ள்ளி அவை. எல்லெ ஸம்பத்துகின் மொர்க்3யாத் ஜவட்டை.
பெண் மோகம், மிருகத்தை கொல்லுதல், எந்நேரமும் சீட்டாடுதல், குடித்தல் என இந்த நான்கும் அளவு கடந்த ஆசையினால் வருவதால்
எப்போதும் கவலையை கொண்டுவரும். இவை செல்வத்தையும் மரியாதையையும் போகச்செய்து விடும்.
Lust over women, killing the animal, playing cards all the time, and drinking, always bring anxiety because they come from inordinate desire.
These will dissipate wealth and respect.
ஶ்லோக் - 36
பூ4ஞ் ஸொம்மரு மாயி ஹோஸ் ஶ்ரேஷ்டு2,
அகாஸ் ஸொம்மரு பா3ப் கு3ரு ꣎
வர ஸொம்மரு மொன் பி3ஸ்ஸொ,
அஸ்கி ஸொம்மரு வெகுல் ப4ரொ ꣎꣎
பூ4ய்ஞ் ஸொம்மர் ஜெனெ மாய் செடா3வு. அகாஸ் ஸொம்மர் ம்ஹொட்டொ கு3ரு பா3ப் ஹோஸுன். வர ஸொம்மர் மொன்னு பி3ஸ்ஸொ ஜாயி. அஸ்கி ப4ரம் ஹொயெ ஸமாசாருன் ஸொம்மர் மொன்னு விசார் பா4ரு.
பூமியை விட பெற்ற தாய் மேலானவர். ஆகாயத்தைவிட பெரிய குரு தந்தை ஆவார். காற்றை விட மனம் வேகமாக செல்லும்.
அனைத்து பாரமான பொருட்களையும் விட மனக்கவலை பாரமானது.
Mother is greater than the Earth. Father is greater than the Sky. The mind is swifter than the wind. Anxiety is the heaviest of all heavy things.
ஶ்லோக் - 37
மாயிக் ஸமானு கோன் அட்லன்,
மாயிக் ஸமானு கோன் ர்ஹகன் ꣎
மாயிக் ஸமானு கோன் ஹொட்3வன்,
மாயிக் ஸமானு கோன் ஹிதௌ ꣎꣎
மாய் ஸொகன் கோன் ஆத3ரொ தே3னு? மாய் ஸொகன் கோன் ந்ஹுருக் ரக்ஷனொ கெரனு? மாய் ஸொகன் கோன் ந்ஹுருக் ஹொவ்ட3னு? மாய் ஸொகன் கோன் ப்ராம கெரனு?.
தாயைப் போல் யார் ஆதரவு கொடுப்பார்கள்? தாயைப் போல் யார் குழந்தையை பாதுகாப்பார்கள்? தாயைப் போல் யார் குழந்தையை
வளர்ப்பார்கள்? தாயைப் போல் யார் அன்புடன் இருப்பார்கள்?.
Who will sustain like mother? Who will guard like mother? Who will nourish like mother? Who will be kind like mother?.
ஶ்லோக் - 38
பா3புஸ் புன்னு தெனாஸ் ஸ்வர்கு3,
பா3புஸ் தொபஸ் கொ2ப்3பி3மு ꣎
பா3புஸ் த்ருப்தி ஹொயேத் அஸ்கின்,
தே3வதான் அஸ்கொகோ3 த்ருபன் ꣎꣎
பா3புக் சொக்கட்3கன் ஸீலத்தெனோஸீ புன்னு கெரெத்தெனொ. பா3பு ஹாலிஸ் ஸ்வர்கு3 அப்3ப3யி. பா3பு வத்தொ ஐகத்தெகொ3 கொ2ப்3பி3ம் தபஸ் கெரெ போ2ள் அப்3ப3யி. பா3ப் போ4ர் த்ருப்தி பொந்தெ3தி, அஸ்கி பித்ரு தே3வதானுன், தெங்கொ3 கொன்னி கெர்னா ஜியெத்மெள்ளி, த்ருப்தி பொந்த3னு.
தந்தையை நன்றாக கவனித்துக் கொள்பவனே புண்ணியம் செய்தவன். தந்தையால் தான் சுவர்க்கம் கிடைக்கும். தந்தை பேச்சை
கேட்பவருக்கு எப்பொழுதும் தவம் செய்த பலன் கிடைக்கும். தந்தை முழு திருப்தி அடைந்தால், அனைத்து பித்ரு தேவதைகளும்,
அவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றாலும், திருப்தி அடைவார்கள்.
He who takes good care of his father is blessed. The father will be means to go to heaven. He who listens to father will always get the
benefit of penance. If the father is fully satisfied, all the Angels will be satisfied, even if nothing is done to them.
ஶ்லோக் - 39
தெ4ரும் ஜனெத்திஸா ஶ்ரேஷ்டா2,
கு3ரு வத்தொ ஸதா3 ருஜு ꣎
கு3ருனும் கு3ரு கோன் ஶ்ரேஷ்டு2,
மாய் வினா கொன்னி ந்ஹீ கு3ரு ꣎꣎
தெ4ரும் களள்ளியெ உத்தமா | கு3ரு வத்தொ கொ2ப்3பி3ம் நிஜ்ஜமு. கு3ருனும் கோன் ஶ்ரேஷ்டு2 மெனெதி, மாய் ஸொம்மர் செடா3வ் கு3ரு கொன்னி ந்ஹீ.
தர்மத்தை அறிந்த உத்தமா | குருவின் வார்த்தை எப்போதும் உண்மை. குருவில் யார் பெரிய குரு என்றால், தாயை விட பெரிய குரு
யாரும் இல்லை.
Oh the best among the learner of the Righteousness | Who is the greatest Guru among the Guru? No Guru is greater than mother.
ஶ்லோக் - 40
மாயி பா3புனு வத்தானும்,
ர்ஹீலிம் தெனு துஷத்திஸொ ꣎
சல்லினிம் மொன்னு முண்ணாத்தொ,
சல்னார் இஸொ தெனாஸ் பெ3டொ ꣎꣎
மாய் பா3ப் ஸங்கெ3 வத்தொ தா4னுக் ர்ஹீலி, தெனு ஸொந்தோஷ் பொட3த்திஸொ சல்லி, தெங்கொ3 மொன்னு பா3தொ3 ஹொனாத்தக் சல்லுனார் கோன் கீ தெனோஸ் சொக்கட்3 பெ3டொ.
பெற்றோர்களின் பேச்சைக் கேட்டு, அவர்கள் சந்தோஷப்படும் படி நடந்து, அவர்களின் மனவருத்தம் அடையாமல் நடந்துகொள்பவர்
யாரோ அவரே நல்ல மகன்.
A good son is one who listens to the his parents's words, behaves in a way that makes them happy, and does not make them grieve.
ஶ்லோக் - 41
அம்பொ3 பா3னுகு கொ2ப்3பி3கு
சொகட்3 மொன்னு தொ2வின் ஸதா3 ꣎
சொகட்3 சல்லத்தெனாஸ் ஸூனு,
ஒஞ்ச்லொ ந்ஹாஶி தெனாஸ் கு3ணி ꣎꣎
அம்பொ3 பா3புகு கொ2ப்3பி3ம் சொகட்3 மொன்னுஸெரொ சொகட்3தா4னுக் ஸீலரியொ தெனோஸ் சொக்கட்3 பெ3டொ. மாய் பா3புக் எச்சட்3னாத் தெனோஸ் சொகட்3 கு3ண்ணுமொன்னு ஸேத்தெனொ.
பெற்றோரை நல்ல மனதுடன் நல்லவிதமாக கவனித்துக்கொள்பவனே நல்ல மகன். பெற்றோரை வஞ்சிக்காதவனே நல்ல
குணமுடையவன்.
A good son is one who takes good care of his parents with a good heart. He who does not deceive his parents is virtous.
ஶ்லோக் - 42
மாயிக் பா3புகு ஶுஶ்ருஷொ,
திந்து3னாத்தொ ஸதா3 கரொ ꣎
எக ஸொம்மர் மஹா த4ர்மு,
து3ஸ்ரொ கை ஜுண்ண ஶாஸ்த்ருனும் ꣎꣎
மாயி பா3புகு கொ2ப்3பி3ம் விஸி ந்ஹாத்தக் ஸேவொ கெர்னொ. ஶாஸ்தருனும் எகொ3 ஸொம்மர் செடா3வ் ஹொயெ தெ4ரும் து3ஸுரெ கொன்னி ந்ஹீ.
பெற்றோரை எப்போதும் சலிப்பில்லாமல் சேவை செய்ய வேண்டும். சாஸ்திரங்களில் இதை விட சிறப்பான தர்மம் வேறு
எதுவும் இல்லை.
Always render service to parents without neglect. There is no virtue in Shastras greater than this.
ஶ்லோக் - 43
ஜா2ட்3 தொகன் பொள்ளொ கோ3 பொள்ளை,
தே3ட் தொகன் ஸவொ பூ2ல் ஶிரை ꣎
க்லிஶேத் மெளாத் அபுல் பா3பு,
பெ3டாக் ஸொண்ண முட3த்திஸொ ꣎꣎
ஜா2டு3ம் ர்ஹீ பொள்ளொ திகுச்சர் க2ல்லொ பொடை3. தொண்மாம் ர்ஹீ பூ2ல் லலை. ஸவொ | கா2ல் பொடெ3 பொள்ளாக் ஜா2ட்3கின், லல்ஜியெ பூ2லுக் தொண்மொகின் பி2ரி ஸானா. ஹொயெதி, விஸி பொடெ3த் மெள்ளொ, பா3பு அபுல் பெ3டாக் நஜ்ஜெ வாடும் ஜாத்தக் ஸொண்ணா.
மரத்திலிருந்து பழம் தன்னால் கீழே விழும். காம்பிலிருந்து பூ கீழே உதிரும், பாருங்கள். விழுந்த பழத்தை மரமும், உதிர்ந்த
பூவை காம்பும் திரும்பிப் பார்க்காது. ஆனால், எரிந்து விழுந்தாலும் தந்தை தன் மகனை கெட்ட வழியில் போக விடமாட்டார்.
The fruit from the tree will fall down by itself. The flower will fall down from the stem. The tree does not care the fallen fruit
and the stalk does not care the fallen flower. But, a father, though it may be irritating, will not let his son get spoilt
ஶ்லோக் - 44
கு3ருனுக் வந்தி3ன் அர்சேதி,
ஆயு பா4க்3கி3 யஶான் மிளை ꣎
பொல்கொ தீ3ன் கெர்னொ மர்யாதொ3,
தெங்கொ ஸுஸ்னொ ஸதா3 நமின் ꣎꣎
கு3ருனுக் பாய்ஞ்பொடி3, அர்ச்சனொ கெரரியொ தெகொ3 போ4ர் ஆயுஶு, ஸம்பத்து, நாவ் (கீர்தி) அப்3ப3யி | கு3ருனுக் பொல்காம் பி3ஸடி3 மொர்க்3யாத் கெர்னொ. கொ2ப்3பி3ம் தெங்கொ3 பாய்ஞ்பொடி3 காம் கெரி தெ3னொ.
குருவை வணங்கி கௌரவிப்பவனுக்கு நீண்ட ஆயுள், செல்வம், புகழ் கிடைக்கும். குருவை ஆஸனத்தில் அமரவைத்து
மரியாதை செய்யவேண்டும். எப்போதும் அவரை வணங்கி சேவை செய்யவேண்டும்.
He who worships and honors the Guru will get long life, wealth and fame. The Guru should be seated on the throne and honored.
Always worship and serve Him.
ஶ்லோக் - 45
கு3ள்ளெ வத்தொ கரை த்3ரோஹி,
மொன்னு ந்ஹீனா ஜியேத் மெளோ ꣎
ஹிதௌ ஸங்கு3ல்ன ஐகுல்ன,
ர்ஹத்த வத்தொ ப4ராட்3 அனி ꣎꣎
து3ரோஹ் கெரத்தெனொ, மொன்னு ந்ஹீ ஜியெத்மெள்ளி சொக்கட்3 கு3ள்ளெகன் வத்தொ கெரை | மொன்னு ஹுடி3 ர்ஹத்த வத்தொ கெர்னாத்தக், சொகட்3 போ2ளுன் தே3த்திஸான்யொ ஸங்கு3னா. திஸான்யொ கானும் க2ள்னா.
துரோகம் செய்பவன், மனமில்லை என்றாலும், நன்கு இனிமையாக பேசுவான். மனம் திறந்து உண்மை பேசாமல், நன்மை
தரக்கூடியவற்றை பேசமாட்டான். அப்படிப்பட்டவற்றை காதில் வாங்கமாட்டான்.
The traitor, though unwilling, will speak sweet words. Without opening the mind and speaking the truth, he will not speak the good.
Nor listens to such things.
ஶ்லோக் - 46
ஶத்ரு ஸத்3கு3ண்ணு மென்வாயி,
கு3ரு து3ர்கு3ண்ணு மெள்ளிஶி ꣎
ஹாலிம் பெ3டாகு ஶிஷ்யாகு,
ஹிதௌ ஸங்கு3னொ கொ2ப்3பி3கு ꣎꣎
ஶத்ரு சொகட்3 உபதே3ஶ் கெருவாயி. கு3ரு தி4ல்லொ உபதே3ஶ் மெள்ளி கெருவாயி. ஹாலிம் பா3ப் அபுல் பெ3டாகு, கு3ரு அபுல் ஶிஷ்யாகு கொ2ப்3பி3ம் சொகட்3 வாட் தா4டுன் தெ3க்கட்3னொ.
எதிரி கூட நல்ல அறிவுரை வழங்கக்கூடும். குரு தவறான அறிவுரை கூட வழங்க நேரிடலாம். எனவே, தந்தை தன் மகனுக்கும்,
குரு தன் சிஷ்யருக்கும் எப்போதும் நல்ல வழிகளை காட்டவேண்டும்.
Even an enemy may give good advice. The Guru may even give false advice. Therefore, the father should always show always teach
what is good to his son and the Guru to his disciple.
ஶ்லோக் - 47
புரோஹிதாகு ஹோதாகு,
தொ3வ்ராகு கு3ருகு ꣎
ஔமான் கெரெதி ப2ல்லாதும் ,
க2ட3ன் ஜாத்தெ ஜெலும் ஹிடொ3 ꣎꣎
புரோஹிதுனுகு, யாக3ம் கெரத்தெங்கா3கு, ஒர்ஸு ஹொயாத்தெங்கா3கு கு3ருகு அவமான் கெரெதி ப2ல்ல ஜெலுமு த3ரித்3ருகொ, ரக்ஷஸ்கொ உஜ்ஜனு.
புரோஹிதர்களையும், யாகம் செய்பவர்களையும், வயதானவர்களையும், குருவையும் அவமதித்தால், அவர்கள் அடுத்த
பிறப்பில் தரித்திரம் பிடித்தவராக, அரக்கராக பிறப்பார்கள்.
If they insult the priests, the sacrificers, the elders and the Guru, they will be born poor and demon in the next life.
ஶ்லோக் - 48
அஸ்கி தெங்கொ விதி4ம் மெள்ளி,
ஶாபனானுகு ஶாந்தி ஶே ꣎
மாயீ ஶாபன ஹோர் ஔதாம்,
ஶமுலன் கொம்மி மார்கு3 ந்ஹீ ꣎꣎
ஶாஸ்தரும் அஸ்கி தெங்கா3 ஶாபனானுக் மெள்ளி பரிஹாருக் வாடுன் ஸே. வேன் மொன்னு பா3தா3ம் மாய் தி3யெ ஶாபனாக் ஶாந்தி கெரத்தக் கொன்னி ஶாஸ்தரும் வாட் ந்ஹீ.
சாஸ்திரத்தில் அனைவருடைய சாபங்களுக்கும் பரிகாரத்திற்கு வழிகள் உண்டு. மிகுந்த மனவேதனையில் தாய் கொடுத்த
சாபத்தை போக்க எந்த சாஸ்திரத்திலும் வழி இல்லை.
In Shastras, there are ways to atone for everyone’s curses. There is no way in any Shastras to atone the curse given by the mother
in great torment.
ஶ்லோக் - 49
ஹோர் அவ்லுனொ மெனெ ப்ராஜ்ஞொ,
தி4ல்ல சால் குல ஹீனுனும் ꣎
ஸேத்திஸா பாதகின் ஸெங்கு3
ஹொய்லுவான கிஸா ததி3ம் ꣎꣎
ஜித்ரவும் ஸொம்மர் அவ்னொ மெனி ஹவ்ட3ரியொ பு3த்3தி4ஶாலி, கா2ல் குலமு உஜி, நஜ்ஜெ கு3ண்ணுன் ஸெர ஸேத்தெ பாபினு ஸெங்கொ3 காய் அவ்ஸரும் மெள்ளி செர ஹோனா.
வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் புத்திசாலி, கீழ் குலத்தில் பிறந்து, கெட்ட குணங்களுடன் இருக்கும் பாவிகளுடன் எந்த
அவசரத்திலும் சேரக்கூடாது.
The wise man who wants to progress in life should not join sinners on any occasion who are low-born and have bad qualities.
ஶ்லோக் - 50
ராக் மென்க்யானுகு ஹந்தைதை3,
ராக் ஔமான் லேதனை கிஸீ ꣎
ராக் மூளு நஸினீக் அஸ்கொ
ராக் நஸை கரெ கொட்டிமு ꣎꣎
ராக் மென்க்யானுக் ஹனி நஸினம் கெரி தய்த3ய். ராக் கோனதி ஒண்டெ வாடும் அவ்மான் அனி ஸொட3ய். ராக் பூரண நாஸுகு காரணொ. ராக் அஸ்கிதேட் கரென் (கெரெ காமு ப2லன்) நஸை.
கோபம் மனிதர்களை அடித்து நாசமாக்கி விடும். கோபம் ஏதாவது ஒரு வழியில் அவமானத்தை கொண்டு வரும்.
கோபம் முழு நாசத்திற்கு காரணம். கோபம் எல்லா இடத்திலும் செயலின் தகுதியை அழிக்கும்.
Anger will slay and destroy people. Anger will bring comtempt somehow. Anger is the cause of complete destruction.
Anger will destroy the merit of action everywhere.
ஶ்லோக் - 51
வித்3யா ர்ஹத்த தொ3ளோஸ் ஐகொ,
ஸெத்து ர்ஹத்த தபஸ் மென ꣎
ஆஶொ பெ4ள்ளி தொ2வேத் து3:கு2
நிராஶா பெ4ளி நிம்மளுன் ꣎꣎
ஐகுலுவொ, வித்3யா ர்ஹத்த தொ3ளொ ஸொகன், ஸெத்து ர்ஹத்த தபஸ் ஸொகன் மெனி. ஆஸ்தொ வேன் தொ2வெத், மொன்னு பா3தொ3 அவயீ. ஆஸ்தொ ந்ஹாத்தக் ர்ஹியெதி மொன்னு பெ4ளி நிம்மள்கன் ர்ஹாயி.
கேட்டுக்கொள்ளுங்கள், கல்வி உண்மையான கண் போல, வாய்மை உண்மையான தவம் போல என்று. அதிக ஆசை வைத்தால்,
மனவேதனை வரும். ஆசை இல்லாதிருந்தால் மனம் மிக நிம்மதியாக இருக்கும்.
Listen, that Education is the real eye and Truth is the real penance. Excessive desire brings mental anguish.
The absence of desire gives peace of mind.
ஶ்லோக் - 52
ஸுக2ம் கிங்கெ பஜேத் வித்3யோ ,
வித்3யொ ஜுண்ண பஜேத் ஸுக2ம் ꣎
ஸுக2ம்கின் வித்3யொகின் கந்தா ,
ஸுட்டை கோனதி தீ3மொகெ ꣎꣎
வித்3யொ பஜெ மெனெத் ஸுக2ம் அப்3பு3னா. ஸுக2ம் பஜெ மெனெத் வித்3யா அப்3பு3னா. ஹே, ப்ரேவ் ஹொயெத்தெனா ! வித்3யா, ஸுக2ம் எல்லெ தீ தெமாமு கோன் வித4ம்தி ஒண்டெ ஸுட்டியாயி
கல்வி வேண்டும் எனில் சுகம் கிடைக்காது. சுகம் வேண்டும் எனில் கல்வி கிடைக்காது. ஹே, பிரியமானவனே ! கல்வி சுகம்
இந்த இரண்டில் எந்த விதத்திலாவது ஒன்று விட்டுப்போகும்.
If one seeks Education, there will be no pleasure. If pleasure is sought, there will be no education. Education and pleasure,
of these two, one will go away somehow.
ஶ்லோக் - 53
அஹோ க3ந்த4ர்வ கோ3ஸ் ஐகி ,
வேத3 வேதா3ங்கு3னும் ர்ஹியெ ꣎
ஸாருன் களைலுனாத் தேடும் ,
வேத3 வாஹுன் மெனாஸ் எமொ ꣎꣎
ஹே, க3ந்த4ர்வ ! அய்கி !! வேத3ம்கின் உபநிஷது3ம் ஸங்கெ3 நிஜ்ஜம் ஹொயெ அர்து2ன் களள்னாத்தெகொ3 வேத3 புஸ்தவுன் மெனரியொ 'வேத3ம் துக்கரியொ பொ3ண்டி3' மெனி வேத3மூஸ் ஸங்கி3ராஸ்.
ஹே, கந்தர்வனே ! கேள் !! வேதம் மற்றும் உபநிஷத்துகளில் சொல்லப்பட்ட உண்மையான அர்த்தத்தை புரிந்து
கொள்ளாதவனுக்கு வேத புஸ்தகம் என்பது 'வேதம் சுமக்கும் வண்டி' என்று வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது.
Hey, Gandharva ! Listen !!. It is said in the Scriptures itself that Scriptures are just Scripture-Carrying vehicle,
for those who do not understand the real meaning of Veda and Upanishad.
ஶ்லோக் - 54
த4னி நிர்த4னின் யே லோகும் ,
நிஷ்டா2 தா4னுக் சலே ஸொகன்
தெ3க்காயி நீதி கை ர்ஹான ,
நீதி சல்னாருன் இஸ்னோ ஶே ꣎꣎
எல்லெ பு4லோகும், ஹன்னவ் ஸேத்தெனொ, ந்ஹீத்தெனொ அஸ்கி தெ4ருமு நியம் தா4னுக் சல்லரியொ ஸொகன் தெ3க்காயி. ஹொயெத் நீதி தா4னுக் சல்லுனார் கொன்னிதெனு ர்ஹானான். ரப்தாம் (ர்ஹத்த தா4னுக்) நீதி அனுஸார் சல்லுனாருன் ரொவ்வொ தெனூஸ் ஸே.
இந்த உலகில், பணம் உள்ளவன், இல்லாதவன் அனைவரும் தர்ம விதிகளின் படி நடந்து கொள்வது போல் தெரியும்.
ஆனால், நீதி படி நடப்பவர்கள் யாருமில்லை. உண்மையில் நீதியை பின்பற்றுபவர்கள் மிகச் சிலரே.
In this world, all those who have money and those who do not, seem to follow the rules of Dharma. But, no one follows the path
of righteousness. In reality, only few who follow justice.
ஶ்லோக் - 55
ராஜேந்த்3ர, மௌஜடு3ன் வத்தொ ,
கெ2டின் பிஸ்னொ ஸதா3 மித2ன்
சரூ போ3லுன் ஸதா3 ஸோடி3 ,
வாக்3 தோ3ஷுன் லேதனை ஹினல் ꣎꣎
ராஜேந்த்3ர ! கெ3ருவ் வத்தொ, கடி2ன் ஹொயெ வத்தொ, பஸ்கடு3ம் வத்தொ, சொட்3ட3 வத்தொ எல்லெ சார் வித4 போ3லுன் (வத்தான்) கொ2ப்3பி3ம் ஸொட்3டெ3. வத்தா தோ3ஷுன் நரகுக் லெஜ்ஜி ஸொட3யி.
ராஜேந்த்ரா ! திமிரான பேச்சு, கடுமையான பேச்சு, புறங்கூறுதல், பொய்யான பேச்சு இந்த நான்கு விதமான பேச்சை எப்போதும்
விட்டுவிடு. வார்த்தை தோஷம் நரகத்தில் கொண்டுபோய் விடும்.
Oh Rajendra ! Always stay away from Arrogant speech, Harsh speech, slanderous speech and falsehood speech. Blemish in speech will
lead to hell.
ஶ்லோக் - 56
த3யாளுப்பன் மெனெ வஸ்து ,
கு3ண்ணுனும் பெ4ளி ம்ஹொட்டயொ
தா3த்ருப்பன் லேதனை கீர்தி ,
தி3ய்யொ மோக்ஷிகு காரணொ ꣎꣎
அஸ்கி தெங்கொ3 ஸஹாவ் கெரி த3யா தெ3க்கட3த்தெ கு3ண்ணுனும் பெ4ளி ஶ்ரேஷ்டு2. தா3ன் தே3ரியொ கு3ண்ணு நாவ் க2ள்ளி அவை. எல்லெ தீ3 குண்ணுன் மோக்ஷம் அப்3ப3த்தக் காரணொ ஹோஸு.
அனைவருக்கும் உதவி செய்து கருணை காட்டுவது குணங்களில் மிகச் சிறந்தது. தானம் கொடுக்கும் குணம் புகழை கொண்டு
வரும். இந்த இரண்டு குணங்களும் முக்தி கிடைக்க காரணம் ஆகும்.
Helping all and showing mercy is the best among the good qualities. The nature of giving brings fame.
These two qualities are the means of salvation.
ஶ்லோக் - 57
கொட்டிம் பிஸான் ஹொயேத்மெள்ளி ,
மேகு3ம் பனிகு பி4ண்டி3லி
தளா தீரு கடன் ஜான்கீ ,
த4மா தா4முரு காம் ஸொடி3ன் ꣎꣎
கொட்டிலெக்கும் பிஸொ மெளொ, மேகு3ம் பனிக் ஸீதி3 பொவ்ஸ் பொடை3 மெனி நொம்மிலி, அவ்ஸா அவ்ஸர், ஹாது காமுன் ஸொட்3டி3 தளா கெட்டொ பொ2டி3 ஸொண்ணா.
எங்குமே, முட்டாள் கூட, மேகத்தில் தண்ணீரை பார்த்து மழை வரும் என நம்பி, அவசர அவசரமாக, கை வேலையை விட்டு,
ஏரிக்கரையை உடைக்க மாட்டான்.
Nowhere, even a fool, looking at the dark clouds and believing that it will rain, will hastily leave their work and break the
shores of the lake.
ஶ்லோக் - 58
ஸதாம் ஸத்கரெ விஸ்னாரு ,
ப்ரதிஜ்ஞொ ஹிண்டுனாரு எனு
மித்ரு காமுனு கெர்னாத்தொ ,
ர்ஹனாரு அஸ்கோஸி நீசுனு ꣎꣎
கொ2ப்3பி3ம் கெரெ சொக்கட்3 காமுனுக் ஹவ்ட3ன் ஜவள்ளெத்தெனு, மெனெ வத்தொ த3டெத்தெனு, ஸிங்கை3து காமுன் கெர்னாத்தக் ர்ஹாத்தெனு, எனு அஸ்கிதெனு நீசுனு.
எப்போதும் செய்த நல்ல காரியத்தை மறப்பவர்கள், கொடுத்த வாக்கை மீறுபவர்கள், நண்பர்களின் வேலையை செய்யாதவர்கள்,
இவர்கள் அனைவரும் கேவலமானவர்கள்.
Those who always forget the good deed done, those who break the promise made, and those who do not do the work of friends are all
mean-minded.
ஶ்லோக் - 59
கெர்னொ ஶேத்தெ க்ரியான் அஸ்கி ,
மொன்னும் நூன்மெனி து4ட்3டி3லி
ப2ல்லாம் ஸத3ஸும் அன்தைலி ,
ஜிக்3னொ காமுன் ஶெணம் பெ4ளி ꣎꣎
கெர்னொ ஸேத்தெ அஸ்கி காமுன் முது3ல்லொ மொன்னும் நிர்ணயம் கெர்லி, தி4டவ் கெர்லி பள்சாது ஸபா4ம் ஸங்கி3 அஸ்கிதெங்கா3 ஸம்மத் க2ள்ளி, பெ4ளி சுரும் காமுன் முஸடி3 ஜெகு3ஞ்சுனொ.
செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் முதலில் மனதில் நிச்சயம் செய்துகொண்டு, உறுதிப்படுத்திக் கொண்டபின்
சபையில் கூறி அனைவரின் ஒப்புதல் பெற்று, வெகு விரைவாக காரியத்தை முடித்து வெல்ல வேண்டும்.
Determine and confirm mentally all the tasks that need to be completed first. Then put it on the board, get permission and get
things done quickly.
ஶ்லோக் - 60
தூபு பொ4ன்னொ ஸொகன் பை3லுன் ,
விங்க3ள் த3ல்லொ மெனிக் ஸொகன்
தவை ஜாஸ் ஒண்ட தேட் ஔதொ ,
ஹாலிம் ர்ஹவ்வான ஓடுனும் ꣎꣎
பெ3ய்லன் தூபு பொ4ன்னொ ஸொகன். த3ல்லான் விஸ்தவ் ஸொகன். விஸ்தவ் லொகு3த்தொ தூப் அவெதி, தூப் தவை ஜேட3யி. ஹாலிம், எனு தீ3 தெனு ஒண்டேஸ்கன் ர்ஹா ஹோனா.
பெண்கள் நெய் போன்றவர்கள். ஆண்கள் கங்கு போன்றவர்கள். கங்கு அருகில் நெய் வந்தால், நெய் உருகி விடும்.
ஆகவே, இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கக் கூடாது.
Women are like a pot of Ghee (clarified butter). Men are like ember. Should the Ghee come close to the Ember, the Ghee will melt
away. Therefore, these two should not be together.
ஶ்லோக் - 61
ஒண்டிம்புலும் மிளாமேளுன் ,
கெர்வான எங்கொ ஶெந்த தீ ꣎
கௌரி வைரி பு2லே ரட்3வி ,
பரஸ்த்ரி சொட்3டொ3 சுங்கு3டொ3 ꣎꣎
து3ஷ்டொ, ஶத்ரு, சால் அவெ (ருது ஹொயெ) முண்டொ3, து3ஸுரெதெகா3 பெ3ய்லு, சொட்3டொ3, சொட்3டா3 ஸிங்கை3த் - எங்கொ3 ஸெர ஏகாந்தும் மிளன் ஹோனா.
பொல்லாதவன், பகைவன், பூப்படைந்த விதவை, பிறரின் மனைவி, திருடன், திருடனின் நண்பன் - இவர்களை தனிமையில்
சந்திக்கக் கூடாது.
A wicked man, an enemy, a widow who has attained puberty, wife of another, Thief, Thief's friend - Should not meet them in private.
ஶ்லோக் - 62
ஜெலும் தொகன் அவை சா2ளின் ,
ஔதா3ர்யொ ஶௌர்யொ கீ3த் குரன் ꣎
ஸான் தெ4ரேத் மெள்ளி மோல் அவ்ன ,
கைனோஸ் கைனொ மணீஸ் மணி ꣎꣎
த3யாளு கு3ண்ணு, தெ4ய்ர்யமு, ஸங்கீ3து, கவித்வம் எல்லெ அஸ்கி உஜ்ஜினிம் அவரியொ ஸ்வபா4வு கு3ண்ணுன். ஸான் தெ4ரெத்காய் மெள்ளி, கைனொ ரெத்தனு மோல் ஜானா. கைனொ கைனோஸி, ரெத்தன் ரெத்தெனூஸி.
தயாள குணம், தைர்யம், இசை, கவிதை இவை எல்லாம் பிறப்பில் வரும் இயற்கை குணங்கள். சாணை பிடித்தாலும் கூட
வளையல் ரத்தினம் போல் விலை போகாது. வளையல் வளையல் தான். ரத்தினம் ரத்தினம் தான்.
Generosity, Braveness, Music, Poetry are all natural qualities that come with birth. A glass bangle, even if it is polished in a
grind stone, will not go as expensive as Gem. Bangle is bangle and Gem is gem.
ஶ்லோக் - 63
வித்3யாவி ஶில்மொ கோன் ஜன்னொ ,
என் உரேகதி கோன் ஜனன் ꣎
பல்லினி ஹிம்ஸொ கோன் ஜன்லன் ,
ஜனை கீ வந்த்4யொ கோ3 ஸனிம் ꣎꣎
சொவ்தெ3த்தெங்கா3 ஶில்மொ, தெங்கொ3ஜதொ து3ஸுரொ கொங்க3க் களாய்? ந்ஹுரு ஜெனரியொ து3ன்னொ ப3ள்டினுக் ஜதொ கொங்க3க் களாய்? ந்ஹுரு ந்ஹீத்தெ பெ3ய்ல்மெனி கோ3ஸ் ஸாரியொ ஹால் களள்ளத்தக் முஸையா?.
கற்றவருடைய உழைப்பு, அவரைத் தவிர வேறு யாருக்கு தெரியும்? பிரசவ வலி கர்ப்பிணிப் பெண்ணைத் தவிர வேறு யாருக்கு
தெரியும்? மலடியால் வெறுமனே பார்ப்பதால் மட்டும் தெரிந்து கொள்ள முடியுமா?.
Who knows the work of Learned, except him? Who knows the labour pain other than pregnant woman? Can a barren woman know it just
by looking at?
ஶ்லோக் - 64
ரூபு புஷ்டி ஸரா பாடி ,
ர்ஹத்த கோ3த்ருமு உஜின் மெளொ ꣎
வித்3யா ந்ஹீத்தொ ஸபா4ம் ஜுல்ன ,
கின்ஸு பூ2ல் வஸ்னொ ஸொக்கினி ꣎꣎
ஸிங்க்3யார்கன், தி4டம்கன், சொக்கட்3 கோ3த்ரும் உஜ்ஜின் மெளொ, மோது3பூ2ல் வஸுனொ ஸொகன், சொவ்து3 ந்ஹீ மெனெத் ஞானின் ஸபா4ம் ஜொலிஞ்சானா.
அழகாக, வலிமையுடன், நல்ல கோத்திரத்தில் பிறந்து இருந்தாலும், தாழம்பூ வாசனை போல, கல்வி இல்லையெனில் அறிஞர்கள்
சபையில் ஒளிர முடியாது.
Despite beautiful, strong and born into a good clan, like the fragrance of hyacinth, without education cannot shine in the council
of Scholars.
ஶ்லோக் - 65
து3ர்பளுக் தே3த்திஸா தா3னு ,
பு2ட்3கொ தௌ4ரொ சொகட்3 ஸனி ꣎
அனாதி3 மொடொ3 ஹெட்டைனி ,
கௌந்தேயா ஶ்ரீனு லேதனை ꣎꣎
கௌந்தேயா ! து3ர்ப3ள் மென்க்யானுக் தா3ன் தே3த்தே, பு2ட்டிபொடெ3 தௌ4ராக் ப4ந்த3த்தே, அநாதி3 மொடா3க் அந்திம கார்யம் கெரத்தே, எல்லெ தி2னுயோ இஹபர ஸம்பத்துன் க2ள்ளி அவய்.
கௌந்தேயா ! ஏழைகளுக்கு தானம் கொடுத்தல், சிதிலமடைந்த கோவிலைக் கட்டுதல், அநாதை பிணத்திற்கு ஈமச்சடங்கு செய்தல்,
இந்த மூன்றும் இம்மையிலும் மறுமையிலும் செல்வத்தை கொண்டு வரும்.
Kaunteya ! Giving donation to the poor, rebuilding a dilapidated temple, performing funeral rites for an orphaned corpse, all three
will bring wealth in this life and after life.
ஶ்லோக் - 66
கோன் தே3ஶிம் கொன்னி மர்யாதொ3 ,
ப்ரேமொ ப3ந்து4 ரத3ன் பனி ꣎
வித்3யொ வொய்து3 ஸனிம் ந்ஹீகீ ,
தேட் ஸொடி3ன் ஜேண்ண ஶே கெ4டி3ம் ꣎꣎
கோன் ஒண்டெ கா3மு கொன்னி வித4 மொர்க்3யாது, ப்ராமஹொயெ ப3ந்து4னு, ரீண் தெ3னாரு, பனி, சொவ்து3, ஒய்து3 அப்3ப3த்திஸொ ந்ஹீ கீ தெல்லெ கா3ம் ஸொடி3 ஸெணம் ஜேடு3னொ.
எந்த ஊரில் எந்தவித மரியாதை, அன்பான உறவினர்கள், கடன் கொடுப்பவர்கள், தண்ணீர், கல்வி, மருத்துவர் கிடைக்காதோ
அந்த ஊரை விட்டு உடனே சென்று விட வேண்டும்.
In any town where there is no respect, no loving relatives, no lenders, no water, no education, no doctors, leave that town immediately.
ஶ்லோக் - 67
ஶின்னு பை3ல் பிஸ்ன ஸிங்கா3தி ,
ஹங்க்ருதிம் ஶேத்திஸா பெ4டெ3 ꣎
நம்ஸாபு ஶேத்திஸா கே4ரு ,
ஸொடி3ன் ஜானா ஜியேத் மொரன் ꣎꣎
து3ஸுரெ த3ல்லமெனிக் ஆஸ்த பொட3ரியொ பெ3ய்ல், பஸ்கடு3ம் வத்தொ கெரரியொ ஸிங்க3தி, கெ3ருவ் தெ4ரெ காம்கெர்தொ, நம் ஸாப் ஶேத்தெ கே4ரு எல்லெ ஸொட்3டி3 ஜானா ஜியெத் மொரன் அவை.
பிற ஆண்களை விரும்பும் மனைவி, அவதூறு பேசும் நண்பன், திமிர் பிடித்த பணியாள், நாகப்பாம்பு இருக்கும் வீடு -
இவற்றை விட்டு போகா விட்டால் மரணம் ஏற்படும்.
Wife who loves other men, a slanderous friend, an arrogant servant, a house with cobra - death will come, if you do not get rid of these.
ஶ்லோக் - 68
பொ4தி3ரின் ஹிஸ்லொ க3ம்ப்னாரு,
து3ர்ப3ள் பி4க3ரெ சார் ஜனு ꣎
கொ3ப்3ப3 தெ2ப்3ப3 மக3ன் கோ3ஸி ,
ஹன்னவுன் ஜு2ல் ஸொகன் ஜு2ரன் ꣎꣎
மோலுபெ3ய்ல், காம்கெர்தொ, கிஸ்தி வஸுல் கெர்னார், து3ர்ப3ள் பி4யரெ - எனு சார் தெனு கொப்3ப3 ஸியெத்ஸர் கோ3ஸ்தீ காஸ் மக3ன். எனு ரெகத் ஜு2ரரியொ ஜு2ல் ஸொகன், ஹன்னவ் ஜு2ரன்.
விபச்சாரி, வேலைக்காரன், வரி வசூலிப்பவர், ஏழை பிச்சைக்காரன் - இந்த நான்கு பேரும் எப்போது பார்த்தாலும் சும்மாவேனும்
பணம் கேட்பார்கள். அட்டைப்பூச்சி ரத்தத்தை உறிஞ்சுவது போல பணத்தை உறிஞ்சுவார்கள்.
A Prostitute, a Servant, a Tax collector, Poor begger - these four will always ask for money nothing.
They suck the money like a leech that sucks blood.
ஶ்லோக் - 69
கொ2ப்3பி3க் கோன் வேளு கோன் வத்தொ ,
தெ2ப்3பி3க் தே வத்தொ லேதனி ꣎
து3வ்னொ கெர்னாத்தகொ பொண்ணாத்தகொ ,
கெர்லைகீ கோன் தெனாஸ் க3ரி ꣎꣎
கோன் வேளும் காய் வத்தொ கெர்னொ கீ தெல்லெ வேளும் தெல்லெ வத்தான், து3ஸுர தெங்கொ3 பா3தொ3 கெர்னாத்தக், தெனு பா3தொ3 பொண்ணாத்தக், கொ2ப்3பி3ம் கோன் வத்தொ கெரன்கீ தெனூஸ் ஶ்ரேஷ்டு2 ஹொயாத்தெனு.
எந்த நேரத்தில் என்ன வார்த்தை பேச வேண்டுமொ, அந்த நேரத்தில் அந்த வார்த்தைகளை பிறருக்கு வேதனை தராமல்,
தான் வேதனை படாமல், எப்போதும் யார் பேசுபவாரோ, அவரே சிறந்தவர்.
The greatest is the one who always speaks the right words at the right time, without hurting others or hurting himself.
ஶ்லோக் - 70
ஹோம் பா3ளு க3ர்பி4ணீ தௌ4ரொ ,
கு3ரு தே3வு பலத் ரஜொ ꣎
தொ3வ்ரொ எங்காமு கொங்கோதீ ,
தெ3க்ன ஶே கரொ ஹாத்ஸர ꣎꣎
ஹோம், ந்ஹுருபா3ள், கெ4வ்ரரின், தௌ4ரொ, கு3ரு, தே3வ், ராஜ்ஜலரியொ ரஜொ, ஒர்ஸு ஹொயெ ஒள்டு3 - எமாம் கொங்கொதீ ஸாத்தக் ஜாத்தவேள், தெங்கொ3 உபஹார் ஹோத்திஸாயொ காய்தி ஹாதும் க2ள்ளி ஜீ ஸனொ.
ஹோமம், குழந்தை, கர்ப்பிணி, கோவில், குரு, கடவுள், ஆளும் அரசன், வயதானவர் - இவற்றில் யாரையாவது பார்க்கப்
போகும்போது, அவர்களுக்கு பயன்படும் ஏதாவது ஒன்றை கையில் கொண்டு சென்று பார்க்க வேண்டும்.
Sacrifice place, Baby, Pregnant woman, Temple, Guru, God, ruling King, aged person - When going to see any of them, should go with
useful gifts to them.
ஶ்லோக் - 71
ஜீப்லெந்த கோ3 மிளை பா4க்3கி3ன் ,
ஜீப்லெந்த ஸொவ்ர ஸிங்க3தின் ꣎
ஜீப்லெந்த ஶெங்களுன் ப்ராப்தின் ,
ஜீப்லெந்த ஜேட3ஸுன் மொரின் ꣎꣎
தோனும் ஸேத்தெ ஜீபு ஹால் சொக்கட்3 வத்தான் கெரெதி ஸம்பத்துன் அப்3ப3யி. ஜீபு ஹால் ப்ராமகொ வத்தொ கெரெதி ப3ந்து4னு ஸிங்க3தினு அவனு. தி4ல்லொ வத்தான் கெரெதி, ஹாதுக் ஶெங்கள் அவ்வாயி. மொரன் மெளி அவ்வாயி.
வாயில் உள்ள நாக்கினால் நல்ல பேச்சு பேசினால் செல்வ வளம் கிடைக்கும். நாக்கினால் அன்பாக பேசினால், உறவினர்களும்
நண்பர்களும் வருவார்கள். தரக்குறைவாக பேசினால் கைக்கு விலங்கு வரலாம். மரணம் கூட வரலாம்.
Fortune will come by means of tongue. Relatives and Friends will come by means of tongue. Handcuff may come by means of tonge.
Even death may come by means tongue.
ஶ்லோக் - 72
அவத்தெ2ப்3பொ3 மிளை பா4க்3கி3ன் ,
நரளும் மிள்ட பன் ஸொகன் ꣎
ஜாத்தெ2ப்3பொ3 கிஸொ மெந்தொ ஐகொ ,
ஐஸ்து கை2 தகெ கொவ்ட் ஸொகன் ꣎꣎
ஸம்பத்துன் அவத்தவேள் நலரும் ஸேத்தெ பனி ஸொகன் ரொவ்வொ ரொவ்வொகன் அவய். ஜாத்தவேள் கோனக் ஜாய் மெனி ஐகொ ! ஐஸ்து க2யி தயெ கொவ்டு பொள்ளொ ஸொகன் ஜியெ வாட் களானா.
செல்வ வளம் வரும்போது தேங்காயில் இருக்கும் தண்ணீரை போல் கொஞ்சம் கொஞ்சமாக வரும். போகும்போது எப்படி போகும்
என்று கேளுங்கள் ! யானை சாப்பிட்டு போட்ட விளாம்பழம் போல போன வழி தெரியாது.
When Fortune comes, it comes little by little, like the water in the coconut. When it goes, how does it go? Listen !
No one knows the way it went, like the wood-apple that an Elephant ate.
ஶ்லோக் - 73
பில்ல மைத்ரி ஸதா3 ஹோன,
ஹேது ந்ஹீனாத்தொ ஹஸ்னொகன் ꣎
ஸ்த்ரீன் ஶெந்தொ தொணதொண்வான ,
து3ஷ்ட மைத்ரி ஸதா3 ஸொடொ3 ꣎꣎
ந்ஹன்ன பில்லலுன் ஸெர கொ2ப்3பி3ம் ஸஹவாஸ் தொ2வ்லன் ஹோனா. காரணொ ந்ஹாத்தக் ஹெட்3டெ3 ஸொகன் அஸ ஹோனா. பெ3ய்லன் ஸெரொ வித்தா வத்தொ கெர ஹோனா. நஜ்ஜெ ஸஹவாஸ் கொ2ப்3பி3ம் ஸொட்3டு3வொ.
குழந்தைகளுடன் நட்பு எப்போதும் கூடாது. காரணமில்லாமல் அசடு போல் சிரிக்கக் கூடாது. பெண்களுடன் வீண் பேச்சு கூடாது.
கெட்ட நட்பை எப்போதும் விட்டுவிடுங்கள்.
Friendships with children should not be always. Don’t laugh like a stupid for no reason. Do not gossip with women.
Always give up bad friendships.
ஶ்லோக் - 74
லோக்சால் தா4க் நங்கு லாஜ் நீதி,
த3க்ஷண் யே ஸோயொ கோனுமு ꣎
ந்ஹீ கி தெக ஸரா லிந்து3ன் ,
வத்தொ தீ ஹோன கொ2ப்3பி3மு ꣎꣎
கா3ம் சல்லரியொ தா4னுக் சல்லத்தெ, ம்ஹொட்டான் மெனெத்தெ தா4க், நாண்யம், கெர ஹோனாத்த காமுன் கெரத்தக் லஜ்ஜொ பொட3த்தெ, ந்யாவ்கன் சல்லத்தெ, த3யா கெரத்தெ - எல்லெ ஸோயொ கொங்கொ3ஜொவள் ந்ஹீகி தெங்கொ3 ஸெர கொ2ப்3பி3ம் தெ3னி க2ன்னி, வத்தொ போ3ல் தொ2வ்லன் ஹோனா.
நாட்டு நடப்புக்கேற்ப நடத்தல், பெரியவர்களிடம் பயம், நாணயம், செய்யக்கூடாத வேலையை செய்ய வெட்கப்படுதல்,
நியாயமாக நடத்தல், கருணை காட்டுதல் - இந்த ஆறும் யாரிடம் இல்லையோ அவர்களிடம் எப்போதும் கொடுக்கல் வாங்கல்,
பேச்சு வைத்துக்கொள்ளக் கூடாது.
Never have dealings or speech with those who do not have the following Six qualities - Good Manners, Fear of adults, Honesty,
Shame to do wrong things, Righteousness, Mercy.
ஶ்லோக் - 75
விஞ்சுக் விக்கு ஸதா3 பூஸும் ,
ம்ஹகிக் தொ3ஸ்காம் ந விக்கு ஶே ꣎
ஸாபுக் தா3தும் ர்ஹியேஸ் விக்கு ,
து3ஷ்டுக் ஆங்கு3 அஸ்கொ விக்கு ந ꣎꣎
விஞ்சுக் விக்கு புஸிடி3ம் ஸே. மை ம்ஹகிக் விக்கு தொ3ஸ்காம் ஸே. ஸாபுக் விக்கு தா3தும் ஸே. ஹொயெதி, து3ஷ்டுகு ஆங்கு3 பூராக் விக்கு ஸே.
தேளுக்கு விஷம் வாலில் உள்ளது. தேனிக்கு விஷம் தலையில் உள்ளது. பாம்பிற்கு விஷம் பல்லில் உள்ளது.
ஆனால், துஷ்டனுக்கோ உடல் முழுவதும் விஷம்.
Scorpion venom is in the tail. The bee has venom in its head. The venom of the snake is in the tooth.
But, a wicked has poison all over the body.
ஶ்லோக் - 76
பொதினும் ஶேத்திஸா வித்3யொ ,
பரு ஹாதும் ர்ஹியேத்திஸா ꣎
ஹன்னௌ பஜெ மெனே வேங்கு3 ,
மகே3த் மிள்ன மெளாதுகு ꣎꣎
பொ3க்3கு3னும் ஸேத்தெ வித்3யா, து3ஸுரதெங்கொ3 ஜொவள் தீ3 தொ2வெ ஹன்னவ், பஜெ மெனெத்திக்காம், மகெ3த் மெள்ளொ அப்3பு3னா.
புத்தகத்தில் இருக்கும் அறிவு, பிறரிடம் கொடுத்து வைத்திருக்கும் பணம், வேண்டியதுமே கேட்டாலும் கிடைக்காது.
The knowledge in the book, the money left to someone - even if you ask, they will not be available to you when you need them.
ஶ்லோக் - 77
ம்ஹூடா3க் நுவன் அபுல் கொ4ம்மொ ,
அபுல் கா3ம்மு ப்ரபு4க் நுவன் ꣎
அபுல் தே3ஶிம் ரஜாக் நுவன்,
வித்3யாவிக் அஸ்கி தேட் நுவன் ꣎꣎
பு3த்3தி4 ந்ஹீத்த மூர்கு2க், தெகா3 கொ4ம்மொ நுவன் (மெச்சுலன்). த4னவானுக், தெனு ஸேத்தெ கா3மு நுவன். ரஜாக், தெகா3 தே3ஶு2ம் நுவன். சொவ்தெ3த்தெகொ3, ஜாரியொ தேட் அஸ்கி நுவன்.
புத்தி இல்லாத முட்டாளை அவனுடைய வீட்டில் புகழுவார்கள். பணக்கார பிரபுவை அவனுடைய ஊரில் புகழுவார்கள்.
அரசனை, அவனுடைய நாட்டில் புகழுவார்கள். கற்றவரை செல்லும் இடமெல்லாம் புகழுவார்கள்.
The fool will be praised in his house. The rich lord will be praised in his hometown. The king will be praised in his country.
The learner will be praised wherever he goes.
ஶ்லோக் - 78
து3ர்ஜனாகு து3தூ3ர் அன்னொ ,
பொ4வே வித்3யான் ஜனேத் மெளொ ꣎
ஸாபுக் பூ4ஸுன் க4லேத் மெள்ளி ,
கொங்கொ தீ தா4கு லைன கீ ꣎꣎
ஒஜனொ காய்தி சொவ்தி3 ர்ஹியெத்மெளி, தெனொ து3ஷ்டு மெனெத் தெகொ3 ஸொடி3 து3தூ3ர் ர்ஹனொ. ஸாபுக் காய்தி ஸொம்மு க4லி ர்ஹியெத்மெளி, ஸாத்தெங்கொ3 தா4க் லைனாத்தக் ர்ஹாய்யா?.
ஒருவன் என்ன தான் கற்றவராய் இருந்தாலும், அவன் கெட்டவன் என்றால் அவனை விட்டு விலகி இருக்கவேண்டும்.
பாம்பு என்னதான் நகை அணிந்திருந்தாலும், பார்ப்பவர்களுக்கு பயம் இல்லாமல் இருக்குமா?.
No matter how educated, one should stay away from him if he is wicked. No matter what jewelry the snake wears, will the onlookers
be without fear?.
ஶ்லோக் - 79
சோர் பீ4க் ரீண் ரோகு3 ஶின்னள்கை ,
தெ3ள்ட்3ரிகை து3க்பொ ஶிஞ்ஜெமன் ꣎
பு2ள்ளொ தீ3 தொ2வெ போ2ள் மெந்தின் ,
ஜிவன் கோ3ஸ் அஷ்ட கஷ்டுனும் ꣎꣎
சொரத்தெ, பீ4ம் மக3த்தெ, ரீண் பொட3த்தெ, ரோக்3 ஸெர ர்ஹாத்தெ, ஶின்னளி ஸெரொ ர்ஹாத்தெ, தெ3ள்ட்ரி தெ4ரி லோள் பொட3த்தெ, ஸெணம் தொ3வ்ரொ பொட3த்தெ, உராவ் பொடெ3யொ கா2த்தெ - எல்லெ ஆட் வித4 கெஷ்டமுக் காரணொ முது3ல்லா ஜெலுமு கர்மப2லனு மெனி அனுப4வ் ஸேத்தெனு களள்ளி திஸோஸ் ஜிவன்
திருடுதல், பிச்சை எடுத்தல், கடன் வாங்குதல், நோய்வாய்ப்படுதல், விலைமாதுடன் இருத்தல், தரித்திரம் பிடித்து அலைதல்,
விரைவில் மூப்படைதல், மீந்து போனதை உண்ணுதல் - இந்த எட்டு வித கஷ்டத்திற்கு காரணம் முன் ஜன்ம கர்மபலன் என்று
அனுபவம் உள்ளவர்கள் தெரிந்து கொண்டு அப்படியே வாழ்வார்கள்.
Stealing, begging, indebtness, falling sick, being with a prostitute, wandering in poverty, premature ageing, eating leftover food -
knowing that the reason for these eight difficulties are the result of Karma of the past life, the experienced will live calmly.
ஶ்லோக் - 80
த3ரி வாஹனொ ஊக் கென்னு ,
ரஸ்து ரை ஸூன் ஸராவளி ꣎
பு2ள்ளொ தீ3ன் தொ2வ்லியே ரீதிம் ,
வஸன் கோ3ஸ் அஷ்ட போ4கு3னும் ꣎꣎
காம்கெர்தின், பொ3ண்டி3, சொக்கட்3 ப3ந்து4னு, தா4ன்யமு, பஜெ ஹொயெ பதா3ர்து2னு, ஸம்பத்து, பெ3டொ3, ஸஹத4ர்மினி - முது3ல்லா ஜெலுமு கெரெ சொகட்3 கர்மப2லனு ஹாலி எல்லெ ஆட் போ4கு3ன் ஸர ஜிவன்.
பணிப்பென், வண்டி, நல்ல உறவினர்கள், தானியம், வேண்டிய பொருள்கள், செல்வம், மகன், மனைவி - முன் ஜன்மத்தில்
செய்த நல்ல கர்மபலனால் இந்த எட்டுவித சுகத்துடன் வாழ்வார்கள்.
Servant maid, Vehicles, good relatives, grains, needed materilas, wealth, son, wife - owing to the result of good Karma of the past
life one will live enjoying these eight comforts.
ஶ்லோக் - 81
லோகும் பஞ்சூ ஜனூஸ் பா3புன் ,
மாயின் மெள்ளி தெனூஸ் மென ꣎
ஜெனத்தென் கு3ரு க4ல்னாரு ,
வத்3தி3 தா4க் த்ராதோ யெங்க அளின் ꣎꣎
பு4லோகும் அவ்ங்கொ ஜெனத்தெனு, ஞான் தி3யெ கு3ரு, பொ3ட்டொ க4லி பி2ரடி3 ஹொவ்டெ3த்தெனு, சொவ்து3 தி3யெ வத்3தி3, தா4க் ஜவடி3 கப3டெ3த்தெனு எனு அஸ்கி பா3புன் ஸொகன், தெங்கொ3 பத்னின் மாயின் ஸொகன் ஹோஸுன்.
உலகில் நம்மை பெற்றவர்கள், ஞானம் தந்த குரு, துணி உடுத்தி வளர்த்தவர்கள், படிப்பு தந்த ஆசிரியர், பயத்தை போக்கி
பாதுகாத்தவர் இவர்கள் அனைவரும் தந்தை போன்றவர்கள், அவர்களின் மனைவியர் தாயார் போன்றவர்கள் ஆவார்கள்.
Our Parents, The Guru who gave wisdom, the one who clothed and nurtured, the Teacher who taught, the protector who helped to get rid
of fear - these are like our father in this world and the wife of these are like our mother.
ஶ்லோக் - 82
ரீண் அனெ பா3பு ஹோஶ் ஶத்ரு ,
ஹீன் அனெ மாயி ஶத்ருன ꣎
ரூபு ந்ஹீத்தெமொ பை3லு ஶத்ரு ,
வித்3யா ஹீன பெ3டொ ஶத்ருன ꣎꣎
ரீண் அனி ஸொடெ3 பா3ப் பெ3டாக் ஶத்ரு ஹோஸு. அவ்மான் அனி ஸொடெ3 மாய் பெ3டாக் ஶத்ரு ஹோஸு. சொக்கட்3 சால்சலன் ந்ஹீத்தெ பெ3ய்லு அம்பு3லாக் ஶத்ரு ஹோஸு. சொவ்து3னாத்த பெ3டொ3 பா3புக் ஶத்ரு ஹோஸு.
கடனாளி ஆக்கிய தந்தை மகனுக்கு எதிரி ஆவார். அவமானத்தை கொண்டு வந்த தாய் மகனுக்கு எதிரி ஆவார். நல்ல நடத்தை
இல்லாத மனைவி கணவனுக்கு எதிரி ஆவார். படிக்காத மகன் தந்தைக்கு எதிரி ஆவார்.
The father who brought the debt becomes the enemy of the son. The mother who caused the humiliation becomes the enemy of the son.
A wife who is not of good character becomes an enemy to her husband. The uneducated son becomes the enemy of the father.
ஶ்லோக் - 83
ஒஜந்தீ பெ3டொ ஸத்3வத்லொ ,
பு2ரொ கொ2ப்3பி3கு ஓ ரஜா ꣎
நொக்கொ து3ர்வத்லொ ஸோவுந்தீ ,
ஸோ வூடுன் கொகொ கி3ல்வினா ꣎꣎
ஓ, ரஜா ! ஒண்டெ ஸோ நஜ்ஜெ ஶீலு பெ3டானுன் ஸொம்மர், ஒண்டெ சொகட்3 ஶீலு பெ3டொ பி2ஜ்ஜாய் கொ2ப்3பி3மு. செந்தா3ம் ந்ஹீத்தக் ஒண்டெ ஸோ நெட்சத்ருன் கொகொ?.
ஓ, ராஜா ! நூறு கெட்ட ஒழுக்கமுள்ள மகன்களை விட நல்ல ஒழுக்கமுள்ள ஒரு மகன் போதும் எப்போதும். ஒரு சந்திரன்
இல்லாமல் நூறு நட்சத்திரங்கள் எதற்கு?.
A son of good morals is always better than a hundred bad moral sons. Why a hundred stars without a moon?.
ஶ்லோக் - 84
பா3பு ஹொட்3வஸு பா3ல்யம்மு ,
அம்ப்3லொ ஹொட்3வஸு ஜாணுமு ꣎
பெ3டான் தொ3வ்ரப்பனும் க4ல்தன் ,
கொ2ப்3பி3ம் ஸ்த்ரீனுகு தீ4னு ந்ஹீ ꣎꣎
ந்ஹன்னப்பனும் பா3ப் ஹொவ்ட3ஸு. யௌனமு த3ல்லொ ஹொவ்ட3ஸு. தொ3வ்ரொ பொ3டெ3 கலமு பெ3டான் ஸீலஸுன். ஜித்ரவ் பூராக் து3ஸ்ரெ தெங்கொ3 நொம்மி ஜிவரியொ பெ3ய்ல்மெனிக் கொ2ப்3பி3ம் ஸ்வதந்த்ரம் ந்ஹீ.
குழந்தைப் பருவத்தில் தந்தை வளர்ப்பார். இளமையில் கணவர் வளர்ப்பார். வயதான காலத்தில் மகன்கள் பார்த்துக்கொள்வர்.
வாழ்க்கை முழுவதும் பிறரை நம்பி வாழும் பெண்களுக்கு எப்போதும் சுதந்திரம் இல்லை.
The father will raise her in childhood. The husband will raise her in youth. Sons will take care of them in old age. Women who depend
on others for life never have freedom.
ஶ்லோக் - 85
பூ4 ப்ரத3க்ஷிண ஸோ வாளுன் ,
காஶி யாத்ரொ கெரெ ப2லுன் ꣎
ஸேதும் ஸோன் ஸ்நான் கெரெ போ2ளுன் ,
மாயிக் சல்லுத தே கெ4டி3ம் ꣎꣎
பு4லோகும் ஸேத்தெ தௌ4ரானுன் பூராக் சுட்டு பி2ரெ ப2லனு, ஸோவாள் (100) கஶி யாத்ரொ ஜியெ ப2லனு, ரமேஶுரு ஸுந்து3ரும் ஸோவாள் பு3டெ3 ப2லனு அஸ்கி மாயிக் சொக்கட்3கன் ஸீலியெத் தெல்லெ கெ4டிம் அப்3ப3யீ.
பூமியில் இருக்கும் கோவில்களைச் சுற்றிய பலனும், நூறு முறை காசி யாத்திரை சென்றால் கிடைக்கும் பலனும், ராமேஷ்வரம்
கடலில் நூறு முறை நீராடிய பலன் எல்லாம், தாயை நன்றாக பார்த்துக்கொண்டால் அந்த நொடியில் கிடைக்கும்.
By taking good care of the mother, one will get the benefit of going around the temples on earth, the benefit of hundred
pilgrimages to Kashi, the benefit of bathing hundred times in Rameshwaram Sea, momentarily.
ஶ்லோக் - 86
பெ3டாக் பாஞ்சு ஒர்ஸு ஹோல்லெந்து ,
ரஜொ ஸோன்கினி தே ப2ராம் ꣎
தெ3ஸ் லெந்து ஶிக்3டொ3 ஸோன் ஶீல்னொ ,
ஸோள் ப2ல்ச மித்ரு ஸோன்கினி ꣎꣎
பா3ப் தெகொ3 பெ3டாக் பாஞ்சு ஒர்ஸு ஹோ லெந்து ரஜொ ஸொகன் ஸீலுனொ. தெக ப2ராது, தெ3ஸ்ஸு ஒர்ஸு ஶிஷ்ய ஸொகன் ஸீலுனொ. ஸொவ்வள் ஒர்ஸு ப2ல்சொ ஸிங்கை3த் ஸொகன் சல்த கெர்னொ.
தந்தை தன் மகனுக்கு ஐந்து வயது ஆகும் வரை ராஜாவைப் போலவும், அதன் பிறகு, பத்து வருடம் சிஷ்யனைப் போல்
பார்த்துக்கொள்ள வேண்டும். பதினாறு வயதிற்கு பிறகு நண்பனை போல் நடத்த வேண்டும்.
The father should treat his son like a king until he is five and then as a student next ten years. Should treat like a friend after
sixteen.
ஶ்லோக் - 87
ஸெத்து மாயி மதி பா3பு ,
தெ4ரும் பை4 த3யா ஸிங்க3தி ꣎
ஶாந்தி பை3லு ஸவன் ஸூனு ,
ஏ ஸோ ஜன் மொரொ பா3ந்த4வுன் ꣎꣎
ர்ஹத்தவத்தொ மொரெ மாயி. ஞான் மொரெ பா3பு. தெ4ரும் மொரெ பை4. தெ3ட்ஷன் மொரெ ஸிங்கை3த். மொன்னு நிம்மள் மொரெ கே4ரளி (பெ3ய்ல்). மாப் மொரெ பெ3டொ. எல்லெ ஸோ ஜனாலுஸ் மொரெ ஊகுன் (ப3ந்து4ன்).
வாய்மை என் தாய். அறிவு என் தந்தை. தர்மம் என் சகோதரன். கருணை என் நண்பன். மன அமைதி என் மனைவி.
மன்னிப்பு என் மகன். இந்த ஆறு பேர் தான் என்னுடைய உறவினர்கள்.
The truth is my mother. Knowledge is my father. Virtue is my brother. Mercy is my friend. Peace of mind is my wife.
Forgiveness is my son. These six are my relatives.
ஶ்லோக் - 88
மாய் ஸொகன் பர தா3ராகு ,
ஒரை மத்தி ஸொகன்கினி ꣎
அபுல் ஸொகொ ஸவ ஆத்மாகு ,
ஹட்வை கீ கோன் தெனாஸ் ஸுதி3 ꣎꣎
து3ஸுரெதெங்கா3 பத்னிக் அபுல் மாய் ஸொகனு, து3ஸுரெதெங்கா3 ஸம்பத்துக் மத்தி ஸொகனு, அஸ்கி ஆத்மாகு அபுல் ஆத்மா ஸொகனு கோன் ஹவ்ட3ன்கி தெனூஸ் பு3த்3தி3மானு.
அடுத்தவர் மனைவியை தன் தாய் போலவும், அடுத்தவர் செல்வத்தை மண் போலவும், அனைவரின் ஆத்மாவையும் தன் ஆத்மா
போலவும் யார் நினைக்கிறாரோ அவரே புத்திசாலி.
One who considers the wife of others as his mother, the wealth of others as sand, and the soul of all as his soul is alone wise.
ஶ்லோக் - 89
கே3வாளு ரீண் லெந்த ஔலன் ,
கா3யி பை3ல் பெ3டொ கே4ர் மெனின் ꣎
ரீண் அஸ்கொ ஹிட்டுதாம் ஜேட3ன் ,
ஹாலிம் கொகொ எமாக் து3குன் ꣎꣎
முது3ல்லா ஜெலுமு பொடெ3 ரீண் (கர்மப2லன்) ஹாலி கா3ய், பெ3ய்ல், பெ3டொ, கே4ர்தா3ர் மெனி அஸ்கி அவை. தெல்லெ ரீண் ஹிட்டெத்திக்காம் அஸ்கி ஜேட3ய். ஹாலிம், ககொ3 பா3தொ3 பொட்3னொ?.
முற்பிறவியில் பட்ட கடன் (கர்மவினை) காரணமாக பசு, மனைவி, மகன், வீடுவாசல் என அனைத்தும் வரும். அந்த கடன்
தீர்ந்ததும் அவை சென்று விடும். எனவே, எதற்காக வேதனைப்பட வேண்டும்?.
Due to the debt (karma) of the previous life, cow, wife, son and a house come. They will leave when the debt is paid off.
So, why suffer?.
ஶ்லோக் - 90
நிஸ்லொ மாத்ரம் ஜுலை சாந்து3 ,
தி3ஸ்லொ மாத்ரம் ஸுரித் நிகை3 ꣎
தி2னூ லோகும் தெ4ரும் ருந்தை3 ,
ஸத்புத்ரு வம்ஶினு உத்3கி3ரை ꣎꣎
செந்தா3ம் ராதும் ஒண்டேஸ் ப்ரகாஷ் தே3ய். ஸுரித் தீ3ஸும் ஒண்டேஸ் ப்ரகாஷ்கன் ர்ஹாய். தெ4ரும் தி2னூ லோகும் விஸ்தார் ஹோய். ஒண்டெ சொக்கட்3 பெ3டொ வம்ஶமுக் நாவ் க2டி3 தீ3, ப்ரகாஶிதொ கெரை.
சந்திரன் இரவில் மட்டுமே பிரகாசிக்கும். சூரியன் பகலில் மட்டுமே பிரகாசிக்கும். தர்மம் மூன்று உலகிலும் பரவும்.
ஒரு நல்ல மகன் குலத்திற்கு பெயர் வாங்கிக்கொடுத்து ஒளிரச் செய்வான்.
The moon shines at night. The sun shines during the day. Virteousness premeats all the three worlds.
A good son will make a name for the clan and make it shine.
ஶ்லோக் - 91
துஸ்னி ஸஸ்னி தி4டௌ பு3த்3தி4 ,
சமத்காரு பராக்ரமொ ꣎
ஸொவீயொ ஶேத்திஸா தேடும் ,
வஸஸ் லக்ஷ்மி கிஸா கரெம் ꣎꣎
கொங்கொஜொவள் ஸொந்தோஷு, ஸாஹஸமு, தி4டம் ஹொயெ மொன்னு, மோனொ பு3த்3தி4, ஸமர்து2, தெ4ய்ர்யம் எல்லெ ஸோயொ ஸேகி தெனொ கெரரியொ அஸ்கி காமுனும் லக்ஷ்மி வஸஸ் கெரினு (ர்ஹீகினு) ஜெவுஞ்சடை3யி.
யாரிடம் மகிழ்ச்சி, சாகசம், உறுதியான மனம், கூர்மையான புத்தி, சாமர்த்தியம், வீரம் இந்த ஆறும் இருக்கிறதோ அவன்
செய்யும் அனைத்து காரியங்களிலும் லக்ஷ்மி வாசம் செய்து வெற்றி பெறச்செய்வாள்.
He who has Joy, Adventure, Determination, Ingenuity, Dexterity, Valor will succeed in all endeavours by the grace of Goddess Lakshmi.
ஶ்லோக் - 92
பொ2வ்னொ பா3ளு ஜொமை வொந்து ,
ராஜ்ஜின் ஸௌகத்திஸா ரஜொ ꣎
ஶே ந்ஹீ மெனினு ஜன்னாத்தொ ,
பஞ்சூ ஜனு ஸதா3 மக3ன் ꣎꣎
அதிதி2, ஜெனெ ந்ஹுருபா3ள்னு, ஜொமை, பெ3ய்ல், ராஜ்யமுக் கப3ட3ரியொ ரஜொ, எனு பஞ்சூ தெனுனு அவ்ரெ ஜொவள் ஶே ந்ஹீ மெனி களள்ளுனாத்தக் ஸதா3 கலமு மகி3லேத் ர்ஹானு.
விருந்தாளி, பெற்ற குழந்தைகள், மருமகன், மனைவி, நாட்டை காக்கும் அரசன் இந்த ஐவரும் நம்மிடம் இருக்கிறதா இல்லையா
என தெரிந்து கொள்ளாமல், எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.
The five people viz., Guest, children, Son in law, Wife and the King who protects the country will always keep demanding without
bothering whether we have it or not.
ஶ்லோக் - 93
ப3ராஸ் அபுல் து3டெ3 ஹன்னௌ ,
லானி பா3புகெ கொ2ப்3பி3மு ꣎
தி4ல்லனா பை4கெ கோ3ஸ் ஐகொ ,
பெ4ள்ளி தி4ல்லொ ஸதா3 அளிகெ ꣎꣎
ஐகுவோ !! ஸ்வயம்கன் தொ3டு3ஞ்ஜெ ஹன்னவும் ஜிவத்தேஸ் செடா3வு. பா3ப் தொ3டு3ஞ்ஜி தி3யெ ஹன்னவும் ஜிவத்தெ மத்4யமொ. பை4 ஹன்னவும் ஜிவத்தெ தி4ல்லொ. ப4ந்தி3லியெ பெ3ய்லு ஹன்னவும் ஜிவத்தெ வேன் தி4ல்லொ.
கேளுங்கள் !! சுயமாக சம்பாதித்த பணத்தில் வாழ்வது மேலானது. தந்தை சம்பாதித்த பணத்தில் வாழ்வது நடுத்தரமானது.
சகோதரனின் பணத்தில் வாழ்வது கேவலமானது. கட்டிய மனைவியின் பணத்தில் வாழ்வது மிகக் கேவலமானது.
Listen !! Best is to live on self-earned money. Living on the money the father earned is mediocre. Living on the money of brother
is disgusting. Living on the money of wife is too disgusting .
ஶ்லோக் - 94
உத்தமாக் ராகு கெ4ட்3போ4ரு ,
மத்4யமாக் ராகு தீ3 கெ4டி3 ꣎
அத4மாக் ராகு ராத்3தீ3ஸு ,
பாபிக் ராகு மொரன் முஸை ꣎꣎
உத்தமாக் அவெ ராகு ஒண்டெ கெ4டி3ம் ஜேட3யி. மத்4யமாக் அவே ராகு தீ3 கெ4டி3ம் ஜேட3யி. அத4மாக் அவெ ராகு தி3ன்னு பூராக் ர்ஹாயி. பாபிக் அவே ராகு மொரன் லெந்து ர்ஹாயி.
உத்தமரின் கோபம் கணப்பொழுதில் போய்விடும். மத்யமரின் கோபம் இரண்டு கணத்தில் போய்விடும். அதமரின் கோபம் நாள்
முழுவதும் இருக்கும். பாவியின் போபம் மரணம் மட்டும் இருக்கும்.
The anger of the best man will go away in a moment. The anger of the next man will go away in couple of moments.
The wrath of the lowly man will last a day. But the wrath of the sinner ends with his death.
ஶ்லோக் - 95
அபுல் பு3த்3தி4 ஸுக2ம் மென்னொ ,
கு3ரு பு3த்3தி4 விஶேஷு ந ꣎
திகு3லா பு3த்3தி4 ஹோஸ் நாஸ்து ,
ஒந்து பு3த்3தி4 ஹினம் கெரை ꣎꣎
ஒண்டெனொ தெகொ3 ஸ்வய பு3த்3தி4க் நொம்மி காம்கெரத்தெ ஸுக2மு. கு3ரு ஆலோசனொ ஐய்குலத்தெ வேன் ஸுக2மு. ஶத்ரு ஆலோசனொ ஐய்கெதி அஸ்கி நஸினம் ஹொய்யாய். பெ3ய்லு ஆலோசனொ அவமான் பொட3டை3.
ஒருவன் தன் சொந்த புத்தியை நம்பி செயற்படுவது சுகம். குருவின் அறிவுரையை கேட்பது அதிக சுகம். எதிரியின் அறிவுரையை
கேட்டால் எல்லம் நாசமாகிவிடும். மனைவி அறிவுரையை அவமானத்தை ஏற்படுத்தும்.
It is a pleasure for a person to rely on his own intellect. It is more pleasure to listen to the Guru’s advice.
If you listen to the advice of the enemy, everything will be ruined. Wife advice can cause humiliation.
ஶ்லோக் - 96
நொவ்வொ வாஹனொ தீள் கொப்3பு3 ,
கௌரி காஞ்சனொ ஜாணலி ꣎
பே4ரி ஶூத்3ருன் அடூ வஸ்துன் ,
ரிங்க்3டே3த் கு3ண்ணுக் அவை மெனன் ꣎꣎
நொவ்வகன் க2டெ3 கொ4டா3ன் இத்யாதி3 வாஹனொ, தீளு, கொப்3பு3, து3ஷ்டு, ஸொர்ணு, ஒயஸு பெ3ட்கி, யுத்3த4மு தொ4ண்டொ3, ஸூத்3ருன் - எல்லெ ஆட் வஸ்துனுக் ஹான் ஹான் மெனி ஹனெதீஸீ சொகட்3 வாடுக் அவய் மெனி ம்ஹொட்டான் மெனன்.
புதிதாக வாங்கிய குதிரை போன்ற வாகனங்கள், எள்ளு, கரும்பு, துஷ்டன், தங்கம், இளம்பெண், யுத்த பேரிகை, சூத்ரன் - இந்த
எட்டு பொருளையும் அடி அடி என அடித்தால் தான் நல்ல வழிக்கு வரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
Newly bought horse, Sesame, Sugarcane, a wicked, gold, a young girl, War drums, a Low-born man - adults say that these eight things
get better by beating again and again.
ஶ்லோக் - 97
பொதிதீ ஒந்துதீ ரைதீ ,
பரு ஹாதும் ஜியேஜ்ஜியொ ꣎
மெகி3ன் பி2ரின் அவேத் ஐகொ ,
ஜுன்னொ ஶின்னு துட3ன் மிளை ꣎꣎
ஐகொ !! புஸ்தவு, பெ3ய்லு, ஹன்னவு எல்லெ தி2னூயொ து3ஸுரெதெங்கொ3 ஹாதும் ஜியெத் ஜியெயோஸி. ஹொயெத், பி2ரின் அவத்தவேளு, ஜுன்னொ பொடி3தி, நஜ்ஜிகின்தி, சில்லர்கன்தி அவயி.
கேளுங்கள் !! புத்தகம், மனைவி, பணம் இந்த மூன்றும் பிறர் கைக்கு சென்றால் சென்றது தான். ஆனால், திரும்பி வரும்போது
பழையதாகவோ, கெட்டுப் போனதாகவோ, சில்லறையாகவோ தான் வரும்.
Listen !! The book, the wife, the money are all gone if these three go into the hands of others. But, when comes back it will
come as torn or spoiled or little by little.
ஶ்லோக் - 98
ஜீவுதீ தீ3ன் அபுல் மானு ,
ரக்ஷுல்னொ கொகொ மெந்தன் ꣎
ஜிவ்னிக் நித்யப்பனூஸ் ஜுண்ண ,
மானுக் ஜுண்ண லயம் ஸதா3 ꣎꣎
ஜீவ் தீ3கின் தி அபுல் மானுக் கப3ள்ளுனொ. ககொ மெனெதி, ஜிவ்னி கொ2ப்3பி3ம் ஶாஸ்வதம் ந்ஹா. மானுக் நஸினம் ந்ஹீ.
உயிரைக் கொடுத்தாவது தன்னுடைய மானத்தை காப்பாற்றிக் கொள்ளவேண்டும். ஏனெனில், வாழ்க்கை எப்போதும் நிரந்தரமானது அல்ல.
மானத்திற்கு அழிவு இல்லை.
Preserve your honor by giving even your life because life is not eternal and honor never dies.
ஶ்லோக் - 99
நஜ்ஜாஸ் பு2ர்ன மெனெ பௌ4னொ ,
நஜ்ஜாஸ் பு2ரொ மெனெ ரஜொ ꣎
நஜ்ஜாஸ் லஜ்ஜத்திஸா பொ4த்3ரின் ,
நஜ்ஜாஸ் லஜ்னாத்த கே4ரளி ꣎꣎
அப்3பெ3 ஸம்பா4வனொ புர்னா மெனி மெனரியொ ப4வண் நஜ்ஜாயி. ஸேத்தெயொ பி2ஜ்ஜாய் மெனி ஹவ்ட3ரியொ ரஜொ நஜ்ஜாயி. கொஞ்சுதொ பொட3த்திஸா ஶின்னளி நஜ்ஜாயி. கொஞ்சுதொ பொண்ணாத்திஸா பெ3ய்ல் நஜ்ஜாயி.
கிடைத்த சம்பாதனை போதாது என நினைக்கும் பிராமணர் கெடுவார். இருப்பது போதும் என எண்ணும் அரசன் கெடுவான். நாணம் உள்ள
விலைமாது கெடுவாள். நாணம் இல்லாத மனைவி கெடுவாள்.
The Brahmin who is not content with the earnings will ruin. The king who is content with what he has will ruin. A prostitute who is shy will ruin.
A house wife who is not shy will ruin.
ஶ்லோக் - 100
இக்லாகு ஸுக2 நீஞ்ஜுன் ந்ஹீ ,
பு4க்லாகு ருச்சி பாகுனு ꣎
த4னாஶீகு கு3ருன் ப3ந்து4ன் ,
காமீகு தா4கு லாஜுனு ꣎꣎
வித்3யார்தி2கு ஸுக2ம்கின் ஹோங்கு3 ர்ஹானா. பூ4க் ஸேத்தெகொ3 ருச்சின் களானா. த4னவானுக் கு3ருன், ப3ந்து4ன் மெனெத்தெ தா3க்ஷண் ர்ஹானா. பெ3ய்லன் பஸ்கட் ஹிண்ட3ரியொ தெகொ3 தா4கு, கொஞ்சுதொ ர்ஹானா.
மாணவருக்கு சுகமும் தூக்கமும் இருக்காது. பசியுடன் இருப்பவருக்கு சுவைகள் தெரியாது. பணக்காரருக்கு குரு, சொந்தம் எனும் அனுதாபம்
இருக்காது. பெண் பித்தனுக்கு பயம், வெட்கம் இருக்காது.
The student have no comfort and sleep. The hungry does not know the tastes. The rich will show no sympathy to his Guru or relatives.
The womenizer will have no fear or shyness.
ஶ்லோக் - 101
நங்க்3னாருக் ஔன து3க்3வாளுன் ,
ஜப்னாருக் ஔன பாதகுன் ꣎
முன்னாருக் ஔன போ3ல்கா3ளுன் ,
ஜக்3னாருக் ஔன தா4க்தெ4ரள் ꣎꣎
கே2த் ஜுன்னாருகு கொ2ப்3பி3ம் து3கா3ள் (கா2த்தக் பேத்தக் கொன்னி ந்ஹீ மெனெத்த ஸ்திதி2) அவ்னா. கொ2ப்3பி3ம் ஜபம் கெரத்தெங்கொ3 பாபுன் அவ்னா. வத்தகெர்னாத்த மௌனி கா3ள் பொட்3னான். ஸதா3 ஜாக்3ரம்கன் ஸேத்தெங்கொ3 தா4க்தெ4ரள் அவ்னா.
வயலை உழுபவர்க்கு எப்போதும் பஞ்சம் வராது. எப்போதும் ஜபிப்பவருக்கு பாவம் வராது. மௌனமாய் இருப்பவருக்கு திட்டு
விழாது. எப்போதும் விழிப்புடன் இருப்பவருக்கு பயம் வராது.
There will be no famine for the farmers, no sin for those who pray, no blasphemy for those who keep the vow of silence, no fear for
those who are alert.
ஶ்லோக் - 102
கெ3டி3க் பாஞ்சு கொ4டா3க் தெ3ஸ்ஸு ,
ஐஸ்துக் ஸஸரு ஹாத் ப2ராம் ꣎
து3து3ர் து3ஷ்டுக் ஸொடி3ன் ஜேண்ணொ ,
தெ3க்குதாம் தென்னொ வேங்கு3னும் ꣎꣎
பொ3ண்டி3க் ஸியெத் பாஞ்சு ஹாத் தூ3ர், கொ4டா3க் ஸியெத் தெ3ஸ்ஸு ஹாத் தூ3ர், ஐஸ்துக் ஸியெத் ஸஸர் ஹாத் தூ3ர் ஜேடு3ணொ. து3ஷ்டுக் ஸியெத், தெல்லெ கெ4டிம் தெகொ3 ஸொடி3 ஜு2கு3 து3தூ3ர் ஜேடு3ணொ.
வண்டியை பார்த்தால் ஐந்து முழம் தூரம், குதிரையை பார்த்தால் பத்து முழம் தூரம், யானையை பார்த்தால் ஆயிரம் முழம் தூரம்
சென்றுவிட வேண்டும். துக்கிரியை பார்த்தால், அந்த நொடியே அவனை விட்டு மிக தூரம் சென்றுவிட வேண்டும்.
Stand away five cubit distance when you see a cart, ten cubit distance when you see a horse and thousand cubit distance when you
see an elephant. If you find the wicked, leave him in that moment and go far away.
ஶ்லோக் - 103
ஶிக்னாத்தெ வித்3யொ கோ3 விக்கு ,
விக்கு கா2த்தெ பு2ரின் ஜெமன் ꣎
த3ளித்3ருக் விக்கு ஸத்3கோ3ஷ்டி,
தொ3வ்ராக் விக்குஶி ஜாணலி ꣎꣎
சொவ்து3னாத்தெகொ3 சொவ்து3 விக்கு ஸொகன் லக3ய். பூ4க் திரெ ப2ராது மெல்லொ க2யெத் தெல்லெ விக்கு ஹோயி. து3ஷ்டுக் ஸாது4னுக் ஸியெத் விக்கு ஸொகன் லக3ய். தொ3வ்ரானுக் ஒயஸு பெ3ட்கி விக்கு ஸொகன் லக3ய்.
படிக்காதவருக்கு கல்வி விஷம் போல் தெரியும். பசி தீர்ந்த பின்னும் சாப்பிட்டால் அது விஷம் ஆகும். துஷ்டனுக்கு சாதுக்களை
பார்த்தால் விஷம் போல் தெரியும். கிழவனுக்கு இளம்பெண்ணைப் பார்த்தால் விஷம் போல் தெரியும்.
Education is like poison to the illiterate. Eating after the stomach is full can be poisonous. The saints will be like poison to the
wicked. To an old man, the young woman will be like poison.
ஶ்லோக் - 104
கௌ3னிம் நசினிம் அவானும் ,
மல்லினிம் வௌஜினிம் க2னிம் ꣎
லஜ்ஜுனாத்தொ ர்ஹியேத் நிம்மள் ,
லஜ்ஜேத் கரெ நுனை ஸதா3 ꣎꣎
கீ3த் க3வத்தெமாம், நர்த்தனொ க2ளத்தெமாம், கா3மு லௌகாஸுன் களள்ளெத்தெமாம், மல்லெத்தெமாம், வாத்4யமுன் வவ்ஜெத்தெமாம், கா2த்தெமாம் கொஞ்சுதொ பொ3ண்ணாத்த ர்ஹாத்தெ ப3ரொ. எல்லெமாம் கொஞ்சுதொ பொ3டெ3த் காமுக் அவ்னா.
பாட்டு பாடுதல், நாட்டியம் ஆடுதல், நாட்டு நடப்பை தெரிந்துகொள்ளுதல், சண்டையிடுதல், இசைத்தல், உண்ணுதல்
இவற்றை செய்ய வெட்கப்படாமல் இருப்பது நல்லது. இவைகளில் வெட்கப்பட்டால் வேலைக்கு ஆகாது.
Keeping off bashfullness in Singing, Dancing, Social interaction, Fighting, Playing music, Eating is good.
Bashfullness in these things will mar everything.
ஶ்லோக் - 105
ரஜாக் அவை ப்ரஜா பாபுன் ,
ரஜா பாபுன் புரேதுகு ꣎
த3ல்லாகு பை3ல் கெரே பாபுன் ,
ஶிஷ்ய பாபுன் கு3ரூக் அபுல் ꣎꣎
ப்ரஜான் கெரெ பாபுன் ரஜாக் அவி செரய். ரஜா பாபுன் புரோஹிதுக் ஜீ செரய். பெ3ய்ல் கெரெ பாபுன் த3ல்லாக் அவி லகை3. கு3ருக் அபுல் ஶிஷ்யான் கெரெ பாபுன் அவி செரயி.
நாட்டு மக்கள் செய்த பாவங்கள் அரசனுக்கு வந்து சேரும். அரசனின் பாவங்கள் புரோஹிதரைச் சென்று சேரும். மனைவி செய்த
பாவங்கள் கணவனை வந்தடையும். குருவுக்கு அவருடைய சிஷ்யர்கள் செய்த பாவங்கள் வந்து சேரும்.
The sins of the citizens will fall on the king, and the sins of the king will go to the Pandit. The sins committed by the wife come
upon the husband. The sins of the disciples will fall on the Guru.
ஶ்லோக் - 106
பொ4தி3ரின் கோ3 கு2டை3 ஹன்னவ் ,
த3ரி கோ3 ஜவடை3 மொணம் ꣎
ராடொ3 கோ3 தி3ஜடை3 ஆங்கு3 ,
வம்ஶின் உத்கை பர அங்க3னொ ꣎꣎
மோலுபெ3ய்லு ஸெர ஸஹவாஸ் தொ2வ்லியெத், தெனொ கொ2ப்3பி3ம் ஹன்னவ் மக3ய். காம்கெர்த்தின் மொணம் ஜவடை3. முண்டொ3 (அம்ப்3லொ ந்ஹீத்தெனொ) ஆங்கு3 தி3ஜட்டை. து3ஸ்ரெ தெங்கா3 பெ3ய்ல் வம்ஶமு ஜவட்டை.
விலைமாதுடன் தொடர்பு வைத்துக்கொண்டால், அவள் எப்போதும் பணம் கேட்பாள். வேலைக்காரி மானத்தை வாங்குவாள்.
விதவை உடலை தேய்ந்து போக செய்வாள். அடுத்தவன் மனைவி குலத்தை அழிப்பாள்.
If you have an affair with a prostitute, she will ask for money again and again. A Servant-maid will cause humiliation.
A widow will gradually wear out your body. Someone else's wife will destroy your clan.
ஶ்லோக் - 107
தெ3க்குதாம் சித்து லொள்வாஸு ,
லைதாம் ஹன்னவு ஜேட3ஸு ꣎
மிள்டாம் ஸம்பூ4த ஹோஸ் பாபுன் ,
ஶினாளின் ஸத்3ய கௌரிணின் ꣎꣎
ஶின்னளினுக் ஸியெதி மொன்னு லொள்பாயி. ஹவ்டெ3தி ஹன்னவ் ஜேட3யி. தெங்கொ3 ஸெர ஸம்போ4க3ம் கெரெதி பாபுன் உஜ்ஜையி. ஹாலிமு, ஶின்னளினு நிஜ்ஜம் ஹொயெ ராக்ஷஸ து3ஷ்ட பெ3ய்ல்மெனினுன்.
விபச்சாரிகளைப் பார்த்தால் மனம் தடுமாறும். நினத்தால் பணம் போய்விடும். அவர்களுடன் உடலுறவு கொண்டால் பாவங்கள்
பிறக்கும். எனவே, வேசிகள் உண்மையான ராக்ஷஸ பொல்லாத பெண்கள்.
The mind loses balance when looking at prostitutes. Money is wasted when thinking of them. Having sex with them causes sins.
So, prostitutes are real demonic wicked women.
ஶ்லோக் - 108
உம்ப்3ளா பூ2ல் மெள்ளி தெ3க்வாயி ,
ஹுஜாள் கௌளொ ம்ஹளின் பொகு3ல் ꣎
ஜடீ3 சித்து தி3ரட்3வான ,
ஸ்த்ரீ மொன் நிம்னொ ஜனானன ꣎꣎
பு4லோகுர் கொட்டி தெ3க்கத்தக் முஸுனாத்த உம்ப்3ளா பூ2லு, ஹுஜாள் கௌளொ ம்ஹளின் பகு3ல் மெள்ளொ தெ3க்குதுவாயி. ஹொயெதி, கெ4ட்டி மொன்னு தட கெரத்தக்கின், பெ3ய்லனு மொன்னு லோத் களள்ளத்தக்கின் முஸுனா.
உலகில் எங்கும் பார்க்க முடியாத அத்தி பூ, வெள்ளை காக்கா, மீனின் கால்களைக் கூட பார்த்துவிடலாம். ஆனால்,
கடினமான மனதை இளக வைக்கவோ, பெண்களின் மனதின் ஆழத்தை தெரிந்து கொள்ளவோ முடியாது.
Fig flower, white crow and fish paws can also be seen. But, it is not possible to soften the hard mind or know the depth of
the mind of women.
ஶ்லோக் - 109
சார்ஜ்ஜனா வத்தொ ஹோஸ் நைதொ ,
ஒஜனா வத்தொ ரித்திஸீ ꣎
கோ3 ஶேத்தெகொ நுவன் கொ2ப்3பி3 ,
லோகும் த4ர்ம ரஜாக் ஸொகன் ꣎꣎
சார் மென்க்யான் கெரெ வத்தொ ஸெர்க்ககன் ந்ஹீ ஜியெத்மெள்ளி ந்யாவ் ஹோஸு. ஒண்டெனொ கெரெ வத்தொ ஸெர்க்ககன் ர்ஹியெத்மெள்ளி வித்தாக் ஜாஸு. ஹாலிம், கோன் ஒண்டெனொ வத்தொ கெர்னாத்தக் கோ3 ர்ஹாஸ்கி தெகொ3 பு4லோகும் த4ர்மரஜொ மெனி மெச்சுலனு.
நான்கு பேர் பேசிய பேச்சு சரியாக இல்லை என்றாலும் நியாயம் ஆகும். ஒருவர் பேசிய பேச்சு, சரியாக இருந்தாலும் வீண் தான்.
எனவே, யார் ஒருவன் பேசாமல் சும்மா இருக்கிறானோ அவனை உலகில் தர்மராஜன் என்று புகழுவார்கள்.
The opinion of four persons is accepted as reasonable, though not correct. A man's opinion, even if it is correct, is wasted.
Therefore, the man who never spoke is praised in the world as Dharma Rajan.
ஶ்லோக் - 110
யோகி3 தொ3வ்ரொ ஸதா3சாரி ,
வந்தி3 பா3ளு ரொகி3 ஷ்டுலி ꣎
ஏ ஸாத் ஜெனாகு பாப் ஔன ,
ஒக3த் கொ2ப்3பி3கு ந்ஹீத்தெமொ ꣎꣎
யோகி3, தொ3வ்ரொ, ஆசார்கன் ர்ஹாத்தெனு, கொ3ட்3டு3, பில்லல்னு, ரோகி3, ப4க்துடு3 எல்லெ ஸாத் மென்க்யானுகு, ஒக3த் ர்ஹானா ஜியெத்மெள்ளி, கொ2ப்3பி3ம் பாபுன் அவ்னா.
யோகி, வயதானவர், ஆசாரத்துடன் இருப்பவர், மலடி, குழந்தைகள், நோயாளி, பக்தர் இந்த ஏழு பேருக்கும் எப்போதும் விரதம்
இல்லாவிட்டாலும் பாவம் வராது.
The Yogi, the aged, those who follow etiquette, the barren women, the children, the sick, the devotee - sins do not fall on these
seven, even if they do not observe fasting.
ஶ்லோக் - 111
த4ன் வித்3யா வம்ஶினோ பூ4ப ,
து3ர் மௌஜாக் உஜடை3 முஜுன் ꣎
ஸஜ்ஜனாக் உஜடை3 ஸாருன் ,
நைதொகின் நம்ரொ யேஜ் ஜு2கு3ன் ꣎꣎
ஓ ரஜா ! த4னம், சொவ்து3, உஞ்சகுலொ உஜ்ஜினி எல்லெ தீ2ன்யொ கெ3ருவ் ஸேத்தெகொ3 ஜொவள் ர்ஹியெதி, தெல்லெ தெகொ3 நஜ்ஜெ கு3ண்ணுன் தே3யி, தெல்லேஸ் சொக்கட்3 மென்க்யான் ஜொவள் ர்ஹியெதி சொகட்3 கு3ண்ணுன் தே3யி. ந்யாவ்கன் சல்லத்தெ, வினயம்கன் ர்ஹாத்தெ எல்லேஸ் பி2ஜ்ஜாய் ஒண்டெகொ3.
ஓ ராஜா ! பணம், படிப்பு, உயர்குல பிறப்பு இந்த மூன்றும் கர்வம் பிடித்தவனிடம் இருந்தால், அவை அவனுக்கு கெட்ட குணங்களை
கொடுக்கும். அவையே, நல்லவர்களிடத்தில் இருந்தால் நல்ல குணங்களை கொடுக்கும். நியாயமாக நடத்தல், பணிவுடன் இருத்தல்
இவையே ஒருவருக்கு போதுமானது.
Oh King ! Wealth, Education, and higher births will give evil deeds to the arrogant and good deeds to the good. It is enough if one
behaves reasonably and is humble.
ஶ்லோக் - 112
ரோக்3 ஜுண்ணா திஸொ கோன் ர்ஹாஸு ,
பூ4க் ததி3ம் காய்தி கா2த்தெனொ ꣎
து3:கு2 ர்ஹீன் மெள்ளி ரொஸ்னாரு ,
ராக் ஸொடி3ன் கரெ ஸாத்தெனொ ꣎꣎
பூ4க் கெரத்தவேள் காய் அப்3ப3ரஸ்கி தெல்லெ கை2தி ர்ஹாத்தெ, மொன்னு பா3தா3ம் ர்ஹாத்தவேள் மெள்ளி, ரொஸ்னாத்தக் ராக் ஸொட்3டி3 காம் கெரத்தெ இஸனி கோன் ர்ஹாஸுன்கி தெங்கொ3 ரோக்3 அவ்னா.
பசிக்கும் போது என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிட்டு இருப்பது, மனக்கஷ்டத்திலும் வெறுக்காமல் கோபத்தை விட்டு வேலை
செய்வது இப்படி யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு நோய் வராது.
Those who eat what they get when they are hungry, and those who give up anger and work without hating despite suffering, will not get
sick.
ஶ்லோக் - 113
ஸர்வபூ4த த3யாளுப்பன் ,
தொபஸ் தா3ன் ஶாந்தி லஜ்ஜினி ꣎
தா3ந்தி ருஸ்பொ ஸதூ கு3ண்ணுன் ,
ஶேத்தெங்கோஸ் ஸ்வர்கு3 ஶே மெனன் ꣎꣎
அஸ்கி ஜீவுனு ஜொவள் த3யா தெ3க்கட3த்தெ, தபஸ் கெரத்தெ, தா3ன் தே3த்தே, மொன்னு ஶாந்தி ஸெர ர்ஹாத்தெ, பாபுனு காம் கெரத்தக் லஜ்ஜொ பொட3த்தெ, இந்த்3ரியமுனுக் அண்சுலத்தெ, நியாவ்கன் சல்லத்தெ எல்லெ ஸாத் கு3ண்ணுன் ஸேத்தெங்கொ3 ஸுவர்கு3 அப்3ப3ய் மெனி ம்ஹொட்டான் மெனன்.
அனைத்து உயிர்களிடமும் கருணை காட்டுதல், தவம் செய்தல், தானம் கொடுத்தல், மன அமைதியுடன் இருத்தல், பாவகாரியம்
செய்ய வெட்கப்படுதல், புலன்களை அடக்குதல், நியாயமாக நடத்தல் இந்த ஏழு குணங்கள் இருப்பவர்க்கு சுவர்க்கம் கிடைக்கும்
என சான்றோர்கள் கூறுவர்.
Being merciful to all living beings, penance, giving alms, staying calm, Shame on doing evil deeds, control of the senses, being
reasonable those who have these seven qualities will attain the Heaven.
ஶ்லோக் - 114
சரூ வேது3ன் ஜனேத் மெள்ளி ,
தி4ல்லொ சாலும் ர்ஹியேத் தெனொ ꣎
கித்கத் ஈகி3ன் ர்ஹியேத்மெள்ளி ,
பௌ4ணொ ந்ஹாஸ் ஐடெ3 ஹோஸ் தெனொ ꣎꣎
தி4ல்லொ சால்சலன் ஸேத்தெ ப4வண், சரூ வேது3ன் ஸிக்கி ர்ஹியெத்மெள்ளி, இக்கதி சொவ்தி3 ர்ஹியெத்மெள்ளி தெனொ ப4வண் ந்ஹா, ப4வண் கொ4ம்மொ உஜெ ஸூத்3ரு ஹோஸ் தெனொ.
கெட்ட நடத்தை உள்ள பிராமணன், நான்கு வேதங்களை கற்றிருந்தாலும், என்ன தான் படித்திருந்தாலும் பிராமணன் இல்லை,
பிராமணன் வீட்டில் பிறந்த சூத்திரன் ஆவான்.
A Brahmin is not a Brahmin if has bad behavior even though he has learned the four Vedas, and is well educated. He is a Sudra born
in Brahmin's house.
ஶ்லோக் - 115
ஐடெ3 கொ2ப்3பி3கு ஸன்மார்கு3ன் ,
த3யொ ஸெத்து தி2னூ ஶூசின் ꣎
ஸொண்ணாத்தொ சல்லி அவேத் ஐகொ ,
தெனாஸ் விப்ரு ஸதா3 வனிம் ꣎꣎
ஸூத்3ருகொ3 உஜ்ஜி ர்ஹியெத் மெள்ளி, சொக்கட்3 வாடுன், த3ட்ஷண், ஸெத்து எல்லெ தி2னூ நியமுனுக் ஹாத் ஸொண்ணாத்தொ சல்லி அவெதி, தெனொ பு4லோகும் கொ2ப்3பி3ம் ப4வண் ஹோஸு.
சூத்திரனாக பிறந்து இருந்தாலும், நல்ல வழி, கருணை, வாய்மை இந்த மூன்று நெறிகளை கைவிடாமல் பின்பற்றி வந்தால்,
அவன் உலகில் எப்போதும் பிராமணன் ஆவான்.
Even if he is born as a Sudra, he will always be a Brahmin in the world if he follows these three precepts of good way, mercy and
oratory (always speaking the truth) without giving up.
ஶ்லோக் - 116
ரீண் க2டி3ன் ஶிங்க3ர்ல்வான ,
மெல்லுவானாஸ் அபுல் நுதின் ꣎
கா3ள்ட்3வானாஸ் ஆபதா3ம் மெள்ளி ,
தா3ன் தீ3ன் பொட்3வான சிந்தொ ꣎꣎
ரீண் க2டி3 ஸிங்க்3யார் கெர்லன் ஹோனா. அவ்ரெ மஹிமை அமீஸ் மெனன் ஹோனா. கெஷ்டமு கலமு மெள்ளி து3ஸுரெதெங்கொ3 கா3ள்ட3ன் ஹோனா. தா3ன் தி3யெ ப2ராது, ஹன்னவ் ஜேடி3யொனா மெனி விசார் பொட3ன் ஹோனா.
கடன் வாங்கி அலங்காரம் செய்துகொள்ளக் கூடாது. நம் பெருமையை நாமே சொல்லக் கூடாது. கஷ்ட காலத்திலும் பிறரை திட்டக்
கூடாது. தானம் கொடுத்த பின், பணம் போய்விட்டதே என்று கவலைப்படக் கூடாது.
Should not borrow and beautify. We should not talk about our pride ourselves. Should not blame others even in difficult times.
Should not worry about it after donating.
ஶ்லோக் - 117
ஸிரி ஈகு3ன் கீர்தி பீ2ர் ஶக்தி ,
ஏ பா4க்3கி3ன் ஶேத்திஸா தெகொ ꣎
ஶெயினு பொட்3ஜெளி பொள்யேதி ,
ரோக்3 ஔனாத்தொ தி3ஜை சலன் ꣎꣎
ஸம்பத்து, சொவ்து3, நாவு, ஶக்தி எல்லெ பா4க்3யமுன் ஸேத்தெங்கொ3 ஸீதி பொட்3ஜாள் பொடெ3தி, ரோக்3 அவ்னாத்தோஸ் தி3ஜயி ஜேட3ன்.
செல்வம், கல்வி, புகழ், வலிமை இந்த கொடுப்பினை உள்ளவர்களை பார்த்து வயிறெரிந்தால், நோய் வராமலேயே
பாதிக்கப்படுவார்கள்.
Wealth, education, fame, strength - those who are jealous of these lucky ones will suffer even without any ailment.
ஶ்லோக் - 118
வத்தொ கெர்னிம் சொகட்3 தி4ல்லொ ,
கொங்கிக் ஶே மெனி ஜன்லுனொ ꣎
ஸபா4ம் பி4டா3த்திஸா வத்தொ ,
கெரின் அப்3ப3ள்னொ யோக்3யதொ ꣎꣎
வத்தொ கெரத்தெமாம் அஸ்கிதெங்கொ3 சொகடு3யொ, தி4ல்லயொ ர்ஹாய் மெனி களள்ளுனொ. ஹாலிம், வத்தொ கெரெத்தெவேள் ஸபா4ம் ஒப்புலத்திஸா வத்தான் கெரிகின் யோக்3யதொ அப்3ப3ள்ளுனொ.
பேசுவதில் அனைவருக்கும் நல்லது கெட்டது இருக்கும் என்று தெரிந்து கொள்ளவேண்டும். எனவே, பேசும்போது சபையில்
ஒப்புக்கொள்ளும்படியான பேச்சை பேசி தகுதி பெற்றுக்கொள்ளவேண்டும்.
Everyone needs to know that there is good and bad in speaking. Therefore, when speaking, one must speak in a manner acceptable to the
congregation and get qualified.
ஶ்லோக் - 119
ஸபா4னும் ப்ரீதி கின் நீதி ,
ஶ்ரேஷ்டு2 ஸெத்து தெ4ரும் ஸர ꣎
பக்ஷவந்து ஹொயுல்னாத்தொ ,
நைதொ ஸங்க்3னாரு நித்துலொ ꣎꣎
ஸபா4னும் ப்ராமொகன், ந்யாவ்கன், செடா3வ்கன், ஸெத்து, தெ4ரும் ஸெரொ, ஒண்டெ பொகட்கன் செர்னாத்தொ நீதி ஸங்கு3னாருஸீ நீதிமான்.
சபையில் அன்புடனும், நியாத்துடனும், சிறப்பாகவும், வாய்மை, தர்மத்துடன், ஒருதலைபட்சமாக இல்லாமல் நீதி சொல்பவரே
நீதிமான்.
The best judge is the one who gives the best judgment with love, truth, honesty and impartiality.
ஶ்லோக் - 120
தே3வு ஜுண்ண மெனி ஹௌடின் ,
ஸெத்து ஶாந்தி ஶுசின் ஸொடி3ன் ꣎
நஜ்ஜெ காமுன் கெரத்தெங்கொ ,
தி4ல்லாம் தி4ல்லோஶி லோகுனும் ꣎꣎
தே3வ் ந்ஹீ மெனி ஹவ்டி3லி ஸெத்து, ஶாந்தி, ஸுத்3த3ம் ஸொட்3டி3ன் நஜ்ஜெ காமுன் கெரத்தெனு பு4லோகும் அஸ்கிதேட் தி4ல்லாம் தி4ல்ல அவ்மான் பொட3னு.
கடவுள் இல்லை என்று எண்ணி வாய்மை, அமைதி, சுத்தம் இவற்றை விட்டுவிட்டு, கெட்ட செயல்கள் செய்பவர்கள் உலகெங்கும்
கேவலமாக அவமானப்படுவார்கள்.
Those who think that there is no God and turn away from truth, peace and purity and commit evil deeds will be humiliated all over
the world.
ஶ்லோக் - 121
ஒகத் ஸர பொ4வே தி3ன்னு ,
ஸஸர் அஶ்வ க்ரதுன் கெரின் ꣎
மிள்வெத்திஸானு போ2ள் அஸ்கொ ,
ராக் நஸை கொன்னி ந்ஹீத்திஸொ ꣎꣎
ஜு2கு3 தி3ன்னுன் ஒக3த் ர்ஹீ, ஸஸர் கொ4டா3 யாகு3ன் கெரெத் அப்3ப3ரியொ ப2லனுகு, ராக் மெனெத்தெ கு3ண்ணு கொன்னி ந்ஹாத்தக் நஸினம் கெர்த்தை.
பல நாட்கள் விரதம் இருந்து, ஆயிரம் அஸ்வமேக யாகம் செய்தால் கிடைக்கும் பலன்களை, கோபம் என்னும் குணம்
ஒன்றுமில்லாமல் நாசம் செய்துவிடும்.
Anger will wipe out all the benefits earned by observing fasting for days and performing thousand Horse sacrifices.
ஶ்லோக் - 122
அல்புன் ஸவஸு யே லோகும் ,
கொ2ப்3ப3திம் கெர்ன ஹோஸ் அமி ꣎
விடொ3 ஸெந்த மிளை சுன்னொ ,
யே வினா விடொ3 ஹோஸு கீ ꣎꣎
விடொ3 ஸெங்கொ3 சுன்னொ லவரியொ ஸொகன், எல்லெ லோகும் கொ2ப்3ப3தி ஒண்டெவாள் அல்புடுன் ஸெர ஸஹவாஸ் தொ2வ்ல்னொ பொட3ஸு. சுன்னொ ந்ஹீத்தக் விடொ3 கெரத்தக் முஸையா?.
தாம்பூலத்துடன் சுண்ணாம்பு தடவுதல் போல, இந்த உலகில் எப்போதாவது அற்பர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள
வேண்டியிருக்கிறது. சுண்ணாம்பு இல்லாமல் தாம்பூலம் தரிக்க முடியுமா?.
In this world, we have to associate with narrow minded people sometimes, like the lime applied with betal leaf.
Would betel chewing be complete without lime?.
ஶ்லோக் - 123
பொவ்ஸு பொண்ணாத்தொ பு4ஞ் பிக்ன ,
ஸானாத்தொ காஸு தே3ன குன் ꣎
மாயி க4ல்தே3ஸு மைநாத்தொ ,
பா3ப் ஆவொ ஶிக்கட3ஸ் தெவன் ꣎꣎
பொவ்ஸ் பொண்ணாத்தக் பூ4ய்ஞிர் கொன்னி பிக்குனா. அமி ஸீலுனாத்தக் காஸ் ஹன்னவ் தெல்லேஸ்கன் தி3ய்யொ ஹோனா. மாய் அபுல் ந்ஹுருனுக் பஜெ ஹொயெயொ மைநாத்தக் கெரி தே3ஸ். பா3ப் தெனோஸ்கன் அபுல் பெ3டாக் சொகட்3 தி4ல்லொ ஸிக்கடி3 தே3ஸ். பு4லோகும் எல்லெ ஸ்வபா4வ்.
மழை பெய்யாமல் பூமியில் எதுவும் விளையாது. நாம் பார்த்துக்கொள்ளாமல் பணம் இரட்டிப்பாகாது. தாய் தனது குழந்தைகளுக்கு
வேண்டியதை கேட்காமல் செய்து தருகிறாள். தந்தை அவராகவே தன் மகனுக்கு நல்லது கெட்டது சொல்லித்தருகிறார்.
உலகில் இது இயற்கை.
Nothing grows in the field without rain. Money will not double by itself without us taking care. The mother does what her children need
without asking. The father, teaches his son the good and the bad, by himself. In the world this is natural.
ஶ்லோக் - 124
தே3வு கை தே3ன மைநாத்தொ ,
தே3ஸ்கீ மைநாத்தொ மாயி தீ ꣎
தௌ2கேதிஸ்ன கவாட்3 ஹுக்3ட3ன்
ஹுன்ன தூ3த் அப்3னி கோனொகொ ꣎꣎
அமி தே3வு ஜொவள் ப்ரார்த்தனொ கெர்னாத்தக் தே3வ் கொன்னி தே3னா. ஜெனெ மாய் மெள்ளி, மைநாத்தக் தே3னா. தெட்டெதீஸ்னா கவாட்3 ஹுட3ன். தப்பட்னாத்தக் ஹுன்ன தூ3த் கோனக் அப்3ப3ய்?.
நாம் கடவுளிடம் பிரார்த்திக்காமல் கடவுள் ஒன்றும் கொடுக்க மாட்டர். தாய் கூட, கேட்காமல் கொடுக்கமாட்டாள். தட்டினால் தானே
கதவைத் திறப்பார்கள். கொதிக்கவைக்காமல் சூடான பால் எப்படி கிடைக்கும்?.
God will not give anything without praying him. Even mother too will not give without asking. Door opens only when knocked.
How to get hot milk without boiling?.
ஶ்லோக் - 125
ஸுதி3ன் தூ3ர் ஶேத்தெ காம் மெள்ளி ,
கெ4ந்தெ3ல் ஸோன் ஜன்லி கெர்லஶுன் ꣎
மொகி3ன் லெகு3த்த ர்ஹீன் மெள்ளி
ஸாஸுன் ப4ர்களி ஸோன் ஶிலின் ꣎꣎
பூ2ல் து3தூ3ர் ர்ஹியெத் மெள்ளி தெமாம் ஸேத்தெ மைக் வெக்கிலி கெ4ந்தெ3ல் ஜாரியொ ஸோன் பு3த்3தி4ஶாலின் அவன் ஜாரியொ காம் முது3ல்லாமுக் களள்ளி கெர்லஸுன். மூர்கு2ன், பெ3ஸ்களி ஸோன், லொகு3த்தொ ஸேத்தெ காம் மெள்ளி கெஷ்டம் பொ3டி ஸீலி கெர்னாத்தக் ர்ஹாஸுன்.
தூரத்திலுள்ள பூவிலிருக்கும் தேனை தேடி தேனீ செல்வது போல புத்திசாலிகள் வரப்போகும் வேலையை முன்னரே தெரிந்துகொண்டு
செய்வார்கள். மூடனோ, தவளையை போல, அருகில் இருக்கும் வேலையைக் கூட கஷ்டப்பட்டு பார்த்துக்கொண்டு செய்யாமல்
இருப்பார்கள்.
Like a bee searching for nectar in a distant flower, the wise anticipates the work ahead and get done. The fool, like the frog, will
look with difficulty even at the nearest work, but will do nothing.
ஶ்லோக் - 126
புஷ்டி ஜா2ட்3 கா2ல் அவின் பி3ஸ்னொ ,
பான்கின் ஸைலொ மிளின் ர்ஹியே ꣎
மெகி தேட் பொள்ளொ ந்ஹீ மெல்லி
சை2லொ கோன் நொக்கொ மெந்தகன் ꣎꣎
தெ3ட்டு பான் ஸெரொ நீடொ3 தே3த்திஸா ம்ஹொட்டொ ஜா2டு3 கா2ல் அவி பி3ஸெ ப2ராது, தெல்லெ ஜா2டு3ம் பொள்ளொ தெ3க்கானி மெனி மெல்லி கோன்தி நீடொ3 நொக்கொ மெனன்யா?.
அடர்ந்த இலைகளுடன் நிழல் கொடுக்கக்கூடிய பெரிய மரத்தின் கீழ் வந்து அமர்ந்தபின், அந்த மரத்தில் பழம் இல்லை என எண்ணி
யாராவது நிழல் வேண்டாம் என்று சொல்வார்களா?.
After coming and sitting under a large tree that can provide shade with dense foliage, would anyone say no to shade thinking that the
tree had no fruit?.
ஶ்லோக் - 127
ஸதா3யு ரை கெ4ராவர்து ,
மொந்த்ரு மிள்னி ஹொக3த் வகொ3 ꣎
தா3ன் மான் ஔமான் மிளின் நொவ்யொ
மொருமுன் தொ2வ்னொ பி4த்தரும் ꣎꣎
ர்ஹத்த ஒயஸு, ஸம்பத்து, கொ4ம்மொ சலரியொ ஸமாசாருனு, மொந்துரு, பெ3ய்ல் ஸெரெ மிளயொ, கா2ரியொ ஹொக3து வகை3ரான், தி3யெ தா3ன், மான், ஔமான் எல்லெ நொவ்யொ கொங்கிகு3 ஸங்கு3னாத்தொ மொன்னும் பி4த்தர் ரஹஸ்யம்கன் தொ2வ்லுனொ.
உண்மையான வயது, செல்வம், வீட்டில் நடக்கும் விஷயங்கள், மந்திரம், மனைவியுடனான உடலுறவு, உண்ணும் மருந்து
வகைகள், கொடுத்த தானம், மானம், அவமானம் இந்த ஒன்பதையும் யாருக்கும் சொல்லமல் மனதில் ரகசியமாக வைத்திருக்க
வேண்டும்.
Age, wealth, household matters, Mantras, sexual relation with wife, medicines, honor, dishonor these nine things should be kept
in mind as close secret.
ஶ்லோக் - 128
தொ3ளர் ஸவாத்திஸான் வஸ்துன் ,
கானுர் ஐகத்திஸானுகே ꣎
ஸபா4ம் ஸங்க3த் தெகாஸ் லெங்கொ3
தெ4ரும் ரைன் உன்ன பொண்ணன ꣎꣎
ஸபா4ம் தொ3ளொ ஹால் ஸியயொகின், கான் ஹால் ஐகெயொ ஸங்க3த்தெகா3 தெ4ரும்கின் ஸம்பத்துன் உன்ன பொண்ணா.
சபையில் கண்ணால் கண்டதையும், காதில் கேட்டதையும் பேசுபவனின் நேர்மையும் செல்வமும் குறையாது.
The righteousness and wealth of a man will not diminish who speaks what he has seen with his eyes and what he has heard with with his
ears, in an assembly.
ஶ்லோக் - 129
மொன்னு ஜந்த நிஜம் கை2தின் ,
சொட்3ட3 வத்த பி4டௌ3த்திஸொ ꣎
ஸபா4ம் ஸங்க3த் திஸான் தெங்கொ
தெக ஹால் அவே ஹீன் மிளை ꣎꣎
ஸபா4ம் ஒப்புள்னொ மென்தி மொன்னுக் களய நிஜமுன் ஜ2யி தொ2வி சொட்3ட3 வத்தொ கெரரியொ தெங்கொ3 தி4ல்லயொ அவயி.
சபையில் ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மனதிற்கு தெரிந்த உண்மையை மூடி மறைத்து பொய் சொல்பவர்க்கு தீமை வரும்.
Evil will come to those who cover up the truth known to the them and utter falsehood in order to be accepted in the congregation.
ஶ்லோக் - 130
நிஷ்ட ஶெந்த அஸ்கின் ஆத்மாகு ,
நிஜாத்மாகு ஸமான் மெனி ꣎
ஹட்வின் சல்ல்யேதி பூதாத்மொ
கெங்கு ஶே தே3வு ஸெங்கெ3கொ ꣎꣎
ப்ராமொகன் அஸ்கி ஜீவராஸினுக் அபுல் ஜீவ் ஸொகன் ஹவ்ட3ரியொ ஶுத்3த4ம் ஹொயெ ஆத்மாகு தே3வு க்ருபொ கொ2ப்3பி3ம் ஸெங்கு3கொ ர்ஹாயி.
அன்புடன் அனைத்து உயிரினங்களையும் தன் உயிர் போல் நினைக்கும் சுத்தமான ஆத்மாவுக்கு கடவுளின் கருணை எப்போதும்
துணையாக இருக்கும்.
God's grace will always be complementary to the pure soul who lovingly thinks of all beings as his own.